»   »  ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் விலகிய ராதிகா... இணைந்த சிநேகா, கௌதமி

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் விலகிய ராதிகா... இணைந்த சிநேகா, கௌதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக உள்ளது. டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவர்களாக சிநேகா, கௌதமி, சுதாசந்திரன் பங்கேற்று போட்டியாளர்களுக்கு மதிப்பெண்கள் போட உள்ளனர்.

அறிமுகம் இல்லாத நடன கலைஞர்கள் இவர்களுடன் ஜோடி சேரும் நட்சத்திரங்கள் என நிகழ்ச்சி கலைகட்ட இருக்கிறது. இது ஒரு ஒன் டைம் சான்ஸ் இது வரைக்கும் நீங்கள் பார்க்காத டான்ஸ் என்று கூறி நிகழ்ச்சியை காண ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்றுகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியினர்.

பொதுமக்களுக்கு நடனப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுகிறவர்களுடன் செலபிரிட்டிகள் நடனமாடும் நிகழச்சி இது.

அந்த செலிபிரிட்டி டான்சர்களில் ஒருவராக மிஷா கோஷல் ஆடுகிறார். அவருடன் அனுயா, அபிராமி, பிரியங்கா, சித்ரா, நந்தினி, சான்ட்ரா ஆகியோரும் நடனம் ஆடுகின்றனர்.

விலகிய ராதிகா

விலகிய ராதிகா

ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக சினேகா உடன் ராதிகா பங்கேற்பதாக இருந்தது. இது தொடர்பான விளம்பரமும் வெளியானது. ஆனால் திடீரென ராதிகா விலகி விடவே அவருக்கு பதிலாக சுதாசந்திரன், கௌதமி இணைந்துள்ளனர். ராதிகா விலகியதற்கு காரணம் அவர் சீரியலை ஒளிபரப்பி வரும் டிவி நிர்வாகம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மிஷா கோஷல்

மிஷா கோஷல்

நான் மகான் அல்ல படத்தில் நடிகையாக அறிமுகமானார் மிஷா கோஷல். ராஜா ராணி படத்தில் நயன்தாரா தோழியாக நடித்தார். அதன் பிறகு 180, இஷ்டம், முகமூடி, சுண்டாட்டம், வணக்கம் சென்னை, என்றென்றும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். எல்லாவற்றிலும் ஹீரோயின் தோழி தான். ‘விசாரணை' படத்தில் பெண் போலீஸாக நடித்தார். இப்போது சின்னத்திரைக்கு வந்து விட்ட மிஷா கோஷல். ஜீ தமிழ் சேனலின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனமாடுகிறார் விரைவில் சீரியலில் நடிக்கப் போகிறார்.

சான்ட்ராவின் கண்ணீர்

ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே யாராவது கண்ணீர் விட்டு அழவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அது டான்ஸ் நிகழ்ச்சியிலும் அரங்கேறியுள்ளது. அழகாக நடனமாடிய சான்ட்ராவும் இதில் கண்ணீர் சிந்தியுள்ளார்.

வெட்கப்பட்ட நந்தினி

வெட்கப்பட்ட நந்தினி

ஜீ தமிழின் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நந்தினி, சும்மா டான்ஸ் பிச்சு உதறுகிறார். தொகுப்பாளர் தீபக் சொன்னதைக் கேட்டு கன்னம் சிவக்க, கண்கள் படபடக்க வெட்கப்பட்டாரே பார்க்கலாம்.

பறக்கும் முத்தங்கள்

பறக்கும் முத்தங்கள்

போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் ஆடும் நடனத்திற்கு ஏற்ப சினேகா, கௌதமி, சுதாசந்திரன் ஆகியோர் பறக்கும் முத்தங்களால் நடனமேடையை நனைய வைக்கிறார்கள். சினேகாவிடம் பறக்கும் முத்தம் வாங்க கொடுத்து வைத்த போட்டியாளர்கள்.

English summary
Zee Tamil TV the latest launch from the channel is Dance Jodi Dance which brings together an amazing profusion of talent and skill which explodes on screen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil