twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடும் போட்டிக்கு நடுவில் நிகழ்ச்சிகளை அடுக்கி வரும் ஜீ தமிழ்... மே 1 இது தான் பிளான்

    |

    சென்னை : வரும் மே 1 ஜீ தமிழுடன் 'வலிமை' தினத்தைக் கொண்டாடுங்கள், உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக 'வலிமை' ஒளிபரப்பாகவுள்ளது

    உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பல திரைப்படங்களை வெளியிட்டுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி, உங்களது இந்த ஞாயிறு விடுமுறையை மேலும் உற்சாகமானதாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.

    வரும் மே 1 தொழிலாளர் தினத்தை 'வலிமை' தினமாகக் கொண்டாடவுள்ள ஜீ தமிழ், மாலை 6:30 மணிக்கு அஜித் குமார் நடிப்பில் உருவான அஜித் ரசிகர்கள் கொண்டாடிய 'வலிமை' திரைப்படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பவுள்ளது.

    1000 கோடி கிளப்பில் இணைந்த இந்திய படங்கள்... தமிழ் படம் இருக்கா ? 1000 கோடி கிளப்பில் இணைந்த இந்திய படங்கள்... தமிழ் படம் இருக்கா ?

    வினோத் இயக்கிய வலிமை

    வினோத் இயக்கிய வலிமை

    வலிமை என்றால் பலம், அது உழைக்கும் சமூகத்தின் அடையாளமாகும். எனவே இந்த தொழிலாளர் தினத்திற்கு வலிமை திரைப்படத்தை விட வேறு என்ன பொருத்தமாக இருக்க முடியும் என்று ஜீ தமிழ் குழு பெரிதும் நம்புகிறது.ஹெச். வினோத் இயக்கிய வலிமை திரைப்படம் இந்த விடுமுறையில் அதிரடியாக ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அஜித் குமார், கார்த்திகேயா கும்மகொண்டா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இருக்கையின் நுனியில் அமர்ந்து...

    இருக்கையின் நுனியில் அமர்ந்து...

    இது ஒரு நகரை பாதுகாப்பாக வைக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய ஒரு காவல் அதிகாரியான, ஏசிபி அர்ஜுனை (அஜித் குமார்) சுற்றி நிகழும் கதையாகும். மறுபக்கம், நரேன் என்கிற வோல்ஃப்ரங்கா (கார்த்திகேயா கும்மகொண்டா) வேலையில்லா இளைஞர்கள் பலரின் வாழ்க்கையை சீரழிக்க விரும்புகிறான்.

    நரேனின் மோட்டார்சைக்கிள் கும்பலால் நகரில் குற்றச்செயல்கள் அதிகரிக்க, அர்ஜுன் சட்டம் ஒழுங்கை சீரமைக்க முயல்கிறார். பல கணிக்க முடியாத சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த இத்திரைப்படம், இருக்கையின் நுனியில் பார்வையாளர்களை அமர்ந்து ரசிக்க வைக்கும்.

     தமிழா. தமிழா நிகழ்ச்சி

    தமிழா. தமிழா நிகழ்ச்சி

    அதுமட்டுமல்ல, சுகி சிவம் தலைமையில் நடத்தும் மே-தின சிறப்பு பட்டிமன்றத்தில் 'இன்றைய தேவை கடின உழைப்பா அல்லது புத்திசாலித்தனமா' என்ற தலைப்பில் பாரம்பரிய விவாத நிகழ்ச்சியை, காலை 11.00 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பும், அதைத் தொடர்ந்து சிறப்பு தமிழா. தமிழா நிகழ்ச்சியில் நண்பகல் 12 மணிக்கு முன்கள பணியாளர்களுடன் ஒரு சிறப்பு விவாதம் நடைபெறுகிறது மற்றும் சூப்பர் குயின் சிறப்பு நிகழ்ச்சியில் , மாலை 4.30 மணிக்கு 8 சூப்பர் குயின்கள் ஒரு சில சமூக சேவகர்களுடன் தன்னார்வத் தொண்டு செய்வதைக் காண்போம்.

    கடும் போட்டிக்கு நடுவில்...

    கடும் போட்டிக்கு நடுவில்...

    ஜீ தமிழின் பொழுதுபோக்குகள் நிறைந்த ஒரு ஞாயிற்றுக்கிழமைக்குத் தயாராகுங்கள், மே 1 முழுவதும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. உங்கள் கையில் இருக்கும் டிவி ரிமோட் மற்ற சேனல்களை பார்க்க விடாமல் தொடந்து பல ஸ்வராஸ்யமான நிகழ்ச்சியை கொடுப்பதில் ஜீ தமிழ் மிகவும் ஆயுத்தமாகி உள்ளது.கடும் போட்டிக்கு நடுவில் தரமான நிகழ்ச்சிகளை கொடுப்பதில் ஜீ தமிழ் மிகவும் மும்முரமாக செயல் பட்டு வருகிறது. வரும் மே 1 ஜீ தமிழுடன் கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாகி வருகின்றனர் .

    English summary
    வரும் மே 1 ஜீ தமிழுடன் ‘வலிமை’ தினத்தைக் கொண்டாடுங்கள், உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘வலிமை’ ஒளிபரப்பாகவுள்ளது. வரும் மே 1 தொழிலாளர் தினத்தை ‘வலிமை’ தினமாகக் கொண்டாடவுள்ள ஜீ தமிழ், மாலை 6:30 மணிக்கு அஜித் குமார் நடிப்பில் உருவான அஜித் ரசிகர்கள் கொண்டாடிய ‘வலிமை’ திரைப்படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பவுள்ளது.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X