Zee TV: அடுத்தடுத்து 3 சீரியல்களை இழுத்து மூடும் ஜீ தமிழ் தொலைக்காட்சி.. ரசிகர்கள் கவலை!
சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக உள்ளது Zee தமிழ் தொலைக்காட்சி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த தொலைக்காட்சியில் இத்தனை நாட்களாக ஒளிபரப்பாகி வந்த மூன்று தொடர்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வருகின்றன. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் தொடர் மௌனம் பேசியதே. குடும்ப கதைக்களத்தை கொண்ட இந்த தொடரை சங்கர் இயக்கி வருகிறார். இதில், அசோக் பாலகிருஷ்ணன், ஜோவிடா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், ஃபௌஸி ஹிதாயா,உபாசனா ஆர்.சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்ர நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்போது முடிவுக்கு வர உள்ளது. அதே போல, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரும் முடிவுக்கு வர உள்ளது. இதில், சுகேஷ், அஞ்சனா ஸ்ரீநிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மாரி சீரியலை தொடர்ந்து இரவு 10:30 மணிக்கு நினைத்தாலே இனிக்கும் தொடரும் நிறுத்தப்படுகிறது. ஆனந்த் செல்வன், ஸ்வாதி நடிப்பில் அமானுஷ்யங்கள் நிறைந்த சீரியலாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் முடிவுக்கு வர உள்ளதாக ஜீ தமிழ் அறிவித்துள்ளது. இந்த மூன்று சீரியலுக்கும் மாற்றாக அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட இந்த சீரியல்கள் முடிவுக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் 'சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 புது சீரியல்கள்: இந்த மூன்று சீரியல்களும் முடிய உள்ளதால், புதுப்புது சீரியல்கள் அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளன. ஏற்கனவே ஆலியா மானசா நடித்த பாரிஜாதம் சீரியல் கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆலியா மானசா இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியலை தொடர்ந்து அடுத்து திருமாங்கல்யம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் அண்ணாமலை குடும்பம் என்ற பெயரில் புதிய சீரியல் ஒன்றும் உருவாகி வருகிறது. இதன் காரணமாக மதியம், மாலை மற்றும் இரவு என மூன்று வேளையிலும் தலா ஒவ்வொரு சீரியல் என மொத்தம் 3 சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளன.


Click it and Unblock the Notifications











