»   »  விஜய் டிவியை டிஆர்பியில் முந்திய ஜீ தமிழ்... டுவிட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு

விஜய் டிவியை டிஆர்பியில் முந்திய ஜீ தமிழ்... டுவிட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியை டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ தமிழ் டிவி சேனல் முந்தியுள்ளது என்று சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

டிவி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங்தான் நாடித்துடிப்பு. இதை வைத்துதான் விளம்பரங்கள் அதிக அளவில் கிடைக்கும். தமிழ் சேனல்களில் சன்டிவிதான் நம்பர் 1 ஆக டிஆர்பியில் உள்ளது.

சன் டிவிக்கு அடுத்த படியாக டாப் 5 சேனல்களில் யார் இடம் பெறுவது என்பதுதான் போட்டி. கடந் த வாரம் சன் டிவி முதலிடத்திலும் கே டிவி இரண்டாம் இடத்திலும் பார்வையாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

3 வது இடத்தில் ஜீ தமிழ் உள்ளது. நான்காவது இடத்தில் விஜய் டிவியும் 5வது இடத்தில் பாலிமர் டிவியும் டிஆர்பி ரேட்டங்கில் இடம் பெற்றுள்ளது.

சொல்வதெல்லாம் உண்மை

ஜீ தமிழ் சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக அந்த சேனலின் டிஆர்பி எகிறியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

இவரது என்னம்மா இப்படி பண்றீங்களேம்மாவை வைத்து விஜய் தொலைக்காட்சி எப்போதும் கிண்டல் செய்துக்கொண்டே இருக்கும், அவரும் பல முறை வேண்டாம், இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என பல முறை கூறி சண்டை போட்டார்.

விஜய் டிவி போட்டி

விஜய் டிவி போட்டி

லட்சுமி ராமகிருஷ்ணனை விடாத விஜய் டிவி மறுபடியும் அதே போல நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதனால் போலீஸ் ஸ்டேசன் படியேறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

டுவிட்டரில் பதிவு

தற்போது விஜய் டிவியை லட்சுமி பணிபுரியும் ஜீ தமிழ் தொலைக்காட்சி முந்தியுள்ளது. இதை குறிப்பிட்டு இவர் அந்த தொலைக்காட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

English summary
ZeeTamil crosses vijaytelevision TRP proves a good team can break & make History!! Congrats to the Man & Team behind this success

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil