»   »  உங்க வீட்டு குட்டீஸ் ஜீ தமிழ் டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகணுமா?

உங்க வீட்டு குட்டீஸ் ஜீ தமிழ் டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகணுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் - சீசன் 2' நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசன் 2 போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்க 4 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அழைக்கிறது.

புதுமையான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை வழங்குவதில் புகழ் பெற்ற ஜீ தமிழ் தொலைக்காட்சி குழந்தைகளின் நடிப்புத் திறமையை ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ்' நிகழ்ச்சி வாயிலாக உலகறிய செய்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் - சீசன் 2' நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.

Zee Tamil TV Junior Super star 2 audition on Chennai

ஜூனியர் சூப்பர் ஸ்டார் 2

மே மாதம் தொடங்க உள்ள 'ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் - சீசன் 2' போட்டிக்கான முதற்கட்ட ஆடிஷன், சென்னை, புரசைவாக்கம், எண்: 49, கங்காதீஸ்வர் கோயில் தெருவில் உள்ள அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளியில் வரும் ஏப்ரல் 16, ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணியிலிருந்து நடைபெறும். இதற்கு முன்பதிவு எதுவும் தேவை இல்லை.

குழந்தைகளின் திறமைகள்

குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறியும் வகையில் இந்த முதற்கட்ட ஆடிஷன் நடைபெறும். இதில் நடிப்புத் திறன் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். முதற்கட்ட நேர்முக தேர்விலிருந்துத் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகள், 'ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் - சீசன் 2' போட்டியில் பங்கேற்பார்கள்.

Zee Tamil TV Junior Super star 2 audition on Chennai

குழந்தைகளின் நடிப்பாற்றல்

குழந்தைகளிடம் உள்ள நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி அவர்களுக்கு பெருமைச் சேர்க்கும் நிகழ்வு தான் 'ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ்' போட்டி ஆகும். இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களை ஒரு பிரபல நடுவர் குழு மதிப்பீடு செய்து அவர்களுக்கு வழிகாட்டுதலும் வழங்கவுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியை உலகநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கண்டு களிக்கிறார்கள். எனவே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் உலகத் தமிழர்களால் அறியப்பட்டு புகழ் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், தொகுப்பாளினி அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று மதிப்பெண் வழங்க உள்ளனர்.

English summary
Zee Tamil invites children between 4 and 14 years for audition of Season 2 at Purasaivakkam in Chennai on 16th April.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil