»   »  ஜீ தமிழ் டிவியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற யுகேஜி மாணவன் அஸ்வந்த்

ஜீ தமிழ் டிவியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற யுகேஜி மாணவன் அஸ்வந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மக்களின் மனம் கவர்ந்த ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிப் போட்டி அண்மையில் கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இதில் பிரபல நடிகர் சந்தானம் நட்சத்திர விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களின் மாறுபட்ட நடிப்பாற்றலால் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர். ஜுனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் மக்களின் பேராதரவைப் பெற்று வந்த நிகழ்ச்சி. தமிழகத்தின் துடிப்பான குழந்தைகளை இனம் கண்டறிந்து, அவர்களின் அசாதாரண திறமைகளை வெளிக்கொணர மாபெரும் களத்தை உருவாக்கி தந்தது இந்நிகழ்ச்சி.

குஷ்பு - பாக்யராஜ்

குஷ்பு - பாக்யராஜ்

நடிகை குஷ்பு, இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா ஆகியோர் ஜுனியர் சூப்பர்ஸ்டார்ஸ் சீசனின் நடுவர்களாக பங்கேற்று குழந்தைகளை உற்சாகப்படுத்தி, அவர்களின் நடிப்பாற்றலை மென்மேலும் அழகுபடுத்தி இறுதிப் போட்டியில் மிளிரும் வகையில் வழிநடத்தினர்.

பட்டம் வென்ற அஸ்வந்த்

பட்டம் வென்ற அஸ்வந்த்

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நடிப்புத் திறமைக்கு தளம் அமைத்த 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் வின்னராகி பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் அஷ்வந்த் . முதல் ரன்னராக வனீஷாவும், இரண்டாவது ரன்னராக பவித்ராவும் தேர்வாகியுள்ளனர்.

யுகேஜி குட்டிப் பையன்

யுகேஜி குட்டிப் பையன்

கே.கே.நகரில் உள்ள வாணி வித்யாலயா பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறான். டெடிகேட்டிவ். அவனோட துறுதுறு நடிப்பு, பேச்சு என அனைவரையும் கவர்ந்தான் அஸ்வந்த். இப்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளான்.

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம்

இந்நிகழ்ச்சியானது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இதில் பிரபல நடிகர் சந்தானம் நட்சத்திர விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். பட்டம் வென்றவர்களுக்கு பரிசளித்தார் நடிகர் சந்தானம்.

English summary
Zee Tamil TV Junior Superstars Finale at Kovai Winner – Ashwanth,1st runner up Vanessa,2nd runner up Pavithra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil