சந்திரகலாவிற்கும் சாமுண்டீஸ்வரிக்கும் என்ன பகை.. பழிதீர்க்க துடிப்பது ஏன்? கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: கார்த்திகை தீபம்: உச்சகட்ட கோவத்தில் இருக்கும் சந்திரலேகா, சாமுண்டீஸ்வரி இடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் என சொல்கிறாள். இதை கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி உனக்கு இதே வேலையா போச்சு, எனக்கு வேற வேலை இருக்க அதை பார்த்துவிட்டு வருகிறேன். அதன் பிறகு பேசலாம் என்று தன்னுடைய அறைக்கு சென்று விடுகிறாள். அப்போது, சந்திரகலா, பரமேஸ்வரி பாட்டி வீட்டில், கண்ணாமூச்சி விளையாடிய போது துர்காவின் கழுத்தில் இருந்து தாலி வீடியோ காட்டுகிறாள். இதைப்பார்த்து ராஜசேதுபதி அதிர்ச்சி அடைகிறான். நான் யாருனு தெரியாமல் என்னை அடிச்சிட்டீங்க, இந்த வீடியோவை நான் இப்போ அக்கா கிட்ட காட்டுகிறேன். அப்போ தெரியும் நான் யார் என்று சொல்லிவிட்டு சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது மயில்வாகனன், சந்திரகலாவிடம் இருக்கும் போனை எடுத்து அந்த வீடியோவை டெலிட் செய்து விடுகிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

மீண்டும் தோற்றுப்போகும் சந்திரகலாவிடம் கார்த்திக் பேச வேண்டும் என மாடிக்கு அழைத்துச் சென்று பேசுகிறான். அப்போது கார்த்தி, நான் அத்தையை ஏமாற்றுவதாக இருந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அவர்களை குடும்பத்தோடு ஒற்றுமையாக சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக இதை நான் செய்கிறேன். ஆனால் நீங்கள் அக்காவின் குடும்பத்தையே கெடுக்க நினைக்கிறீர்கள். அதற்கு நான் ஒரு காலம் சம்மதிக்க மாட்டேன். நான் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது என்கிறான். அப்போது சந்திரகலா, உனக்கு ஒரு கதை இருப்பது போல எனக்கும் ஒரு கதை இருக்கிறது. நிச்சயமாக இந்த வீட்டை விட்டு உன்னை வெளியே அனுப்பிவிட்டு சாமுண்டீஸ்வரி குடும்பத்தை பழி வாங்குவேன். அது உறுதி என சவால் விடுகிறாள். அப்போது கார்த்தி, நான் உயிரோடு இருக்கும் வரை அதை உங்களால் செய்யவே முடியாது என சொல்லிவிட்டு கீழே வருகிறான்.

கார்த்திகை தீபம்: கீழே கார்த்திக்காக காத்திருக்கும் ரேவதி, சித்தி என்ன சொன்னாங்க என்று கேட்க அவர்கள் இந்த குடும்பத்தை அழிப்பதில் குறியாக இருக்கிறார்கள். இதற்குப் பின் ஏதோ காரணம் இருக்கு என்று சொல்கிறார்கள். அந்த காரணம் என்னவென்று தான் தெரியவில்லை என சொல்கிறான் கார்த்திக். உடனே ரேவதி, சித்திக்கு வேற வேலையே இல்லை எப்போதும் இப்படித்தான் ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்கள் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். உங்களைப் பற்றியும் என்னை பற்றியும் கவலைப்படுங்கள், உங்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை மறந்து விட வேண்டாம் என சொல்கிறாள்.

செம ரொமான்ஸ்: உடனே கார்த்திக், ரேவதி நீ வரவர தப்பு தப்பா யோகிக்க ஆரம்பித்துவிட்ட, அதை முதலில் நிறுத்து, எனக்கு தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு தூங்க சென்றுவிடுகிறான். அப்போது ரேவதி, கண்ணில் தூசி விழுந்தது போல நாடகமாட கார்த்திக் அருகில் வந்து கண்ணை ஊதி விடுகிறான். இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், இது என் கார்த்திக்கு புரியவில்லை என மனதிற்குள் நினைத்துக் கொள்கிறேன். ஆனால் நிச்சயமாக நீங்களும் நானும் சேர்ந்து வாழ்வோம், அந்த சவாலியில் நான் நிச்சயம் ஜெயிப்பேன் என்னை நீங்க நிச்சயம் காதலிப்பீர்கள் மனதுக்குள் ரேவதி பேசிக்கொள்கிறார் ரேவதி. இதையடுத்து என்ன நடக்கப்போவது என்ன என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X