ரேவதி கண்ணில் விழுந்த தூசி.. நைசாக எடுத்த கார்த்திக்.. தப்பித்து ஓடிய சிவனாண்டி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக், ரேவதி நீ வரவர தப்பு தப்பா யோகிக்க ஆரம்பித்துவிட்ட, அதை முதலில் நிறுத்து, எனக்கு தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு தூங்க சென்றுவிடுகிறான். அப்போது ரேவதி, கண்ணில் தூசி விழுந்தது போல நாடகமாட கார்த்திக் அருகில் வந்து கண்ணை ஊதி விடுகிறான். இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், இது ஏன் கார்த்திக்கு புரியவில்லை என மனதிற்குள் நினைத்துக் கொள்கிறேன். ஆனால் நிச்சயமாக நீங்களும் நானும் சேர்ந்து வாழ்வோம், அந்த சவாலில் நான் நிச்சயம் ஜெயிப்பேன் என்னை நீங்க நிச்சயம் காதலிப்பீர்கள் என்று மனதுக்குள் பேசிக்கொள்கிறார் ரேவதி.
அப்போது, கார்த்திக் இப்போது சரியாகிவிட்டதா என்று கேட்க, இல்லை என்னும் கண்ணில் தூசி இருக்கு என்கிறாள். அதை நாக்கால் எடுத்தால் தூசி வந்துவிடும் என்று சொல்கிறாள். இதை கேட்ட கார்த்திக், இப்படியா இதோ வருகிறேன் என்று வெளியே வந்து, ரோகிணியை அழைத்து செல்கிறான். ரோகிணியை பார்த்து கடுப்பான ரேவதி, நீ எதுக்கு வந்த வெளிய போ என்று திட்டுகிறாள். உடனே ரோகிணி, நீ தான் கண்ணில் தூசி விழுந்துவிட்டது என்று சொன்னதாக ராஜா சொன்னார் என்று சொல்ல, கடுப்பான ரேவதி அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ போ என்று கோவத்தோடு கத்துகிறாள்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, கார்த்திகை தீபம் சீரியலில், சாமுண்டீஸ்வரி தேர்தலில் வெற்றி பெற்று விடுகிறாள். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் தாலியை பரிசாக கொடுப்பதாக சொன்ன நிலையில் அனைவருக்கும் சாமுண்டீஸ்வரி தாலியை பரிசாக கொடுக்கிறாள். இதை அடுத்து தேர்தலில் தோற்றிவிட்டதால் சவால் விட்டபடி சாமுண்டீஸ்வரி வீட்டில் முறைவாசல் செய்ய வேண்டும் என்று பயந்து போன சிவனாண்டி அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற போது, அவனது காரை, ரேவதி, ரோகிணி, துர்கா என அனைவரும் தடுத்து நிறுத்துகின்றனர்.
பழிவாங்கும் கார்த்திக்: இவர்களைப் பார்த்து கடுப்பான சிவனாண்டி என்ன திமிர் இருந்தா, என்னுடைய காரையை வழிமறிப்பீங்க என்று கேட்க, அப்போது ரோகிணி நீங்க தானே தேர்தல்ல தோற்றுவிட்டால், எங்க வீட்டுக்கு வந்து முறைவாசல் செய்றேன்னு சொன்னீங்க, அது செய்யாம நீங்க எங்க ஓடுறீங்க என்று கேட்கிறாள் உடனே சிவனாண்டி அவர்களை அடிப்பதற்காக கட்டையை எடுத்துக் கொண்டு வர, அந்த நேரம் பார்த்து கார்த்திக் அங்கு வந்து, என்ன சிவனாண்டி இவங்கள அடிச்சிருவியா... தைரியம் இருந்தா மேல கைய வச்சு பாரு என்று மிரட்டுகிறான்... உடனே சிவனான்டி கோபத்தில், ஏதோ சவால் விட்டுவிட்டோம் அதற்காக நாங்கள் வந்து உங்கள் வீட்டில் முறை வாசல் செய்ய முடியுமா என்று கேட்க, நீங்க தானே சவால் விட்டீங்க அதனால் தான் முறைவாசல் செய்து கூப்பிடுகிறோம் மரியாதையா வாங்க என்று வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்று துணி, பாத்திரம் என அனைத்து வேலைகளையும் செய்யவைக்கிறான். அப்போது, சந்திரகலா, உங்களை அழைத்து வந்து இப்படி வேலை செய்ய வைத்து, அதன் மூலமாக அந்த கார்த்திக் என்னை பழிவாங்க நினைக்கிறான் என்கிறார் என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











