சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்ல முடிவெடுக்கும் கார்த்திக்.. நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், சிவனாண்டியை தேர்தலில் தோற்கடித்து, வீட்டு வேலை செய்ய கார்த்திக் அழைத்து வருகிறான். வீட்டிற்கு வந்த சிவனாண்டியை அடுத்தடுத்து வேலைகளை செய்ய சொல்லி அசிங்கப்படுத்துகிறான். இதனால் ஆத்திரப்பட்ட சந்திரகலா, கார்த்திக்கை சிக்க வைக்க வேறு ஒரு திட்டம் போட்டு, கோவில் பூட்ட வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்பதை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அபிராமியின் வாரிசுகள் வந்து கையெழுத்து போட்டா தான் கோவிலை திறக்க முடியும் என்ற சூழ்நிலையை சந்திரகலா உருவாக்குகிறாள். கார்த்திக்கிற்கு போன் செய்யும் பரமேஸ்வரி, கோவிலில் நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்று இருக்கிறார்கள். நாளை காலை 10 மணிக்குள், அபிராமியின் வாரிசுகளான மூன்று பேரும் அதிகாரியின் முன் வந்து கையெழுத்து போட வேண்டுமாம். அப்படி இல்லை என்றால், கோவிலை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் கார்த்திக், கோவிலுக்காக நானும் அண்ணன்களும் வந்து கையெழுத்து போடுகிறோம் என்கிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதைத்தொடர்ந்து மயில்வாகனம், இத்தனை நாள் இல்லாமல் இந்த பிரச்சனை எப்போது மட்டும் ஏன் வருகிறது. இது எல்லாம் சந்திராகலாவின் வேலையாகத்தான் இருக்கும் என்கிறான். உடனே கார்த்திக், எதுவாக இருந்தாலும் கோயில் நமக்கு முக்கியம், கோயில் அரசாகத்திடம் சென்று விட்டால், தாத்தாவின் ஆசைப்படி, மாமாவால் கும்பாபிஷேகம் செய்ய முடியாதபடி போய்விடும். இதனால், நான் நிச்சயமாக கையெழுத்து போட்டுத்தான் ஆகவேண்டும். அதுமட்டுமல்லாமல் எத்தனை நாளைக்கு தான், அத்தையிடம் இந்த விஷயத்தை நாம் மறைத்துக் கொண்டே இருப்பது. என்றாவது ஒருநாள் சந்திரகலாவின் மூலமாக இந்த விஷயம் அவர்களுக்கு தெரிந்து விட்டால், பிரச்சனையாகிவிடும், அதற்கு முன் நாமே இந்த விஷயத்தை அத்தையிடம் சொல்லிவிடுகிறேன் என்கிறான் கார்த்திக்.

துணிந்து முடிவு எடுத்த கார்த்திக்: இதைக்கேட்டு பதறிப்போன ராஜராஜன், இப்போதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம் கொஞ்சம் பொறுமையாக இருங்க மாப்பிள்ளை என்று அறிவுரை வழங்குகிறார். இல்ல மாமா இதுக்கு மேல இந்த விஷயத்தை நாம மறைக்க கூடாது. இன்னும் எத்தனை நாள் தான் சந்திரகலா, போல நானும் அத்தையை ஏமாத்திக்கிட்டே இருப்பேன். இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இதுதான் சரியான நேரம் அத்தைக்கிட்ட உண்மைய சொல்றதுக்கு என்கிறான் கார்த்திக். இதைக் கேட்டு மயில்வாகனம், ராஜராஜன் அனைவரும் அதிர்ச்சியாக இருந்தாலும் கார்த்திக் சொல்வதிலும் நியாயம் இருக்கு என புரிந்து கொள்கின்றனர். பின் கார்த்திக் ஆனந்திற்கு ஃபோன் செய்து கோவிலில் கையெழுத்து போட வேண்டிய வேலை இருக்கிறது அனைவரும் நாளைக்கு கோயிலுக்கு வந்து விடுங்கள் என என்கிறார்.

சந்திரகலா, அக்கா சாமுண்டீஸ்வரியிடம் கோவிலில் இப்படி ஒரு விஷயம் நடக்கப் போகுது.. ஊர் தலைவர் என்ற முறையில் இந்த விஷயத்தில் நீயும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்றி விட அவளும் கோவிலுக்கு வர சம்மதிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.‌

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X