கார்த்திக் எடுத்த விபரீதமான முடிவு.. சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிய வருமா? கார்த்திகை தீபம்!

சென்னை: அபிராமியின் வாரிசுகளான மூன்று பேரும் அதிகாரியின் முன் வந்து கையெழுத்து போட வேண்டுமாம். அப்படி இல்லை என்றால், கோவிலை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும் என்ற விஷயத்தை பரமேஸ்வரி பாட்டி சொல்ல, இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். உடனேஇ மயில்வாகனம், இத்தனை நாள் இல்லாமல் இந்த பிரச்சனை எப்போது மட்டும் ஏன் வருகிறது. இது எல்லாம் சந்திராகலாவின் வேலையாகத்தான் இருக்கும் என்கிறான். உடனே கார்த்திக், எதுவாக இருந்தாலும் கோயில் நமக்கு முக்கியம், கோயில் அரசாகத்திடம் சென்று விட்டால், தாத்தாவின் ஆசைப்படி, மாமாவால் கும்பாபிஷேகம் செய்ய முடியாதபடி போய்விடும்.

இதனால், நான் நிச்சயமாக கையெழுத்து போட்டுத்தான் ஆகவேண்டும். அதுமட்டுமல்லாமல் எத்தனை நாளைக்கு தான், அத்தையிடம் இந்த விஷயத்தை நாம் மறைத்துக் கொண்டே இருப்பது. என்றாவது ஒருநாள் சந்திரகலாவின் மூலமாக இந்த விஷயம் அவர்களுக்கு தெரிந்து விட்டால், பிரச்சனையாகிவிடும், அதற்கு முன் நாமே இந்த விஷயத்தை அத்தையிடம் சொல்லிவிடுகிறேன் என்கிறான் கார்த்திக். ஆனால், ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் என இருவரும் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று அவசரப்பட வேண்டாம் என்று சொல்கின்றனர்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அடுத்ததாக துர்காவின் கல்யாண பத்திரிக்கையை கார்த்திக் கொண்டு வர சந்திரகலா அதில் நவீனின் பெயர் இருக்கலாம் என சந்தேகப்படுகிறாள். பத்திரிக்கை பிரித்துக் காட்ட சொல்ல கார்த்தியும் பிரித்து காட்ட அதில் மாப்பிள்ளையின் பெயர் இருக்கிறது. பிறகு பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய துர்கா எனக்கும் நவீனுக்கும் கல்யாணம் நடக்குமா என்று வருத்தப்பட கார்த்திக் பத்திரிகையில் நவீன் என்ற பெயர் தான் இருக்கிறது, பூஜை அறையிலும் இந்த பத்திரிக்கைக்கு தான் பூஜை செய்ததாக சொல்கிறான். அதையடுத்து சந்திரகலா அந்த பத்திரிக்கையில் ஏதாவது பிரச்சனை செய்ய முடியுமா என்று திட்டம் போடுகிறாள்.

சந்திரகலாவின் திட்டம்: மறுபக்கம் சந்திரகலா, கோவிலில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை தெரிந்து கொண்டு தான், இப்படி ஒரு திட்டத்தை போட்டு இருக்கிறேன். நிச்சயம் கோவிலுக்கு கார்த்திக் வந்து தான் ஆக வேண்டும். நானும் அங்கே அக்காவை வரவைத்து சரியான நேரத்தில் அவனை அக்காவிடம் மாட்டி விடுகிறேன் என்கிறான். உடனே சிவனாண்டி, நாம ஒரு திட்டத்தை போட்டால், அவன் இளையராஜாவை வைத்து ஒரு திட்டத்தை போட்டுவிடுவான் என்று சொல்ல, அதற்கும் ஒரு பிளான் இருக்கிறது. அந்த இளையராஜா இங்கே வராத படி ஒரு திட்டம் வைத்து இருக்கிறேன் என்கிறாள். மறுநாள் காலை, சந்திரகலா தனது திட்டத்தின் படி, சாமுண்டீஸ்வரியை கோவிலுக்கு அழைத்து செல்கிறாள்.

பெண்ணிடம் சிக்கிய இளையராஜா: அதே நேரம், இளையராஜா காரில் வந்து கொண்டு இருக்க, கர்ப்பிணி பெண் ஒருவர் இளையராஜாவின் காரை வழிமறித்து லிப்ட் கேட்கிறாள். கர்ப்பிணி ஆக இருப்பதால் இளையராஜாவும் அவரை காரில் ஏற்றுக் கொண்டு அழைத்து வந்து கொண்டிருக்க, ஆட்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் காரை நிறுத்த சொல்லிய அந்தப் பெண், இளையராஜா தன்னை கையைப் பிடித்து இழுத்து விட்டார் சத்தம் போட்டு கத்த, பொதுமக்கள் கூடிய இளையராஜாவை கட்டி வைத்து நியாயம் கேட்கின்றனர். இதனால் இளையராஜாவால் கோவிலுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் போகிறது. இளையராஜா நீண்ட நேரமாகியும் வராததால் கார்த்திக்கு போன் செய்யும் பரமேஸ்வரி பாட்டி, இன்னும் இளையராஜா வரவில்லை என்று சொல்ல இளையராஜா எங்க இருக்கிறான் என்பது தெரியாமல் போகிறது. இதையடுத்து மயில்வாகனமும் கார்த்திக்கும் இளையராஜாவை தேடி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X