கட்டிப்புடி கட்டிப்புடிடா.. துணிக்கடையில் கசமுசா.. ரொமான்ஸ் மூடில் ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், துர்காவிற்கு திருமணத்திற்கு புடவை எடுப்பதற்காக அனைவரும் கடைக்கு கிளம்புகின்றனர். ஆனால், துர்கா நான் கடைக்கு வரவில்லை. நவீன் எங்கு இருக்கிறான், எப்படி இருக்கிறான் என தெரியாமல் நான் எப்படி திருமணத்திற்கு புடவை எடுக்க வர முடியும் என வருத்தப்பட்டு பேசுகிறாள். உடனே கார்த்திக் தன்னுடைய அறையில் மறைவாக வைத்திருந்த நவீனை அழைத்து வந்து காட்டுகிறார். நவீனை பார்த்து துர்கா சந்தோஷப்படுகிறாள். இவர்கள் அறையில் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென சந்திரகலா உள்ளே வந்துவிட அனைவரும் பதறுகின்றனர். சந்திரகலா வருவதை பார்த்த நவீன், கட்டிலுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறான். அப்போது சந்திரகலா, கடைக்கு கிளம்பாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, அக்கா கூப்பிடுகிறார்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.
ஜவுளி கடையில் ரோகினி மயில்வாகனத்துடன் துணி எடுத்துக்கொண்டு இருக்கிறாள், அதேபோல ரேவதிக்கு, கார்த்திக் துணிகளை எடுத்து கொடுக்கிறான். கார்த்திக்கிற்கு ரேவதி சட்டை வாங்குகிறாள். ஆனால், கார்த்திக் நான் துணி எடுத்து தைத்துத்தான் போடுவேன் என்று சொல்ல, சரி அப்படியே செய்துவிடலாம் என, தன்னுடை புடவை நிறத்திற்கே கார்த்திக்கிற்கு சட்டை எடுக்கிறாள். பின் அந்த கடையில் இருக்கும் பெண், சட்டை தைப்பதற்கு அளவு எடுக்க கார்த்திக்கிடம் வர, அந்த பெண்ணை மிரட்டும் ரேவதி, என் புருஷனுக்கு நான் தான் அளவு எடுப்பேன் என சண்டை போட்டு அளவு எடுக்கிறாள். இப்படி துணிக்கடையிலேயே இவர்களுக்கு ரொமான்ஸ் நடக்கிறது.

கார்த்திகை தீபம்: இப்படி அனைவரும் ஜோடி ஜோடியாக துணி எடுத்துக்கொண்டு இருப்பதை பார்த்த துர்கா, இந்த நேரத்தில் நவீன் நம்முடன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், நாம மட்டும் தனியாக துணி எடுத்துக் கொண்டு இருக்கிறோமே என வருத்தப்படுகிறார். பின் நவீனுக்கு ஃபோன் செய்து புடவை எடுக்க வேண்டும், எப்படியாவது நீ வந்து விடு என சொல்கிறாள். துர்கா இப்படி கூறியதும் நவீன் மாறு வேஷம் போட்டுக் கொண்டது ஜவுளி கடைக்கு வருகிறான்.
சந்திரகலாவின் திட்டம்: சந்திரகலாவிற்கு நவீன் ஜவுளிக்கடைக்கு வந்தது தெரிந்துவிட, எப்படியாவது நவீனை கடத்தி விட வேண்டும் அவனை கடத்தினால்தான், கார்த்திக்கின் பிளான் தவிடு பொடியாகும் என பிளானை போட்டு போலீசை வர வைக்கிறாள். கார்த்திக்கிற்கு நவீன் ஜவுளிக்கடைக்கு வந்தது தெரிந்துவிட, கார்த்திக் நவீனை துணிக்கடையில் ஒரு இடத்தில் ஒளித்து வைக்கிறான். ஜவுளிக்கடைக்கு வரும் போலீஸ், நவீனை பல இடத்தில் தேடி பார்த்துவிட்டு அவன் கிடைக்காததால் திரும்பி சென்றுவிடுகின்றனர். மறுபக்கம் சிவனாண்டியும் சந்திரகலாவும் எப்படியாவது இந்த நவீனை மாட்டி விட வேண்டும் என திட்டமிடுகின்றனர்.
நவீனை காப்பாற்றி பத்திரமாக அழைத்து வரும் கார்த்திக், நவீன் அறையில் ஒளித்து வைக்கிறான். துர்கா ரூமுக்குள் நவீன் இருப்பதை அறியும் சந்திரகலா அவனை சிக்க வைக்கிறாள், அதே நேரத்தில் கார்த்திக் நகையை திருடும் போலி அப்பா அம்மாவை கையும் களவுமாக பிடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











