துர்கா திருமணம் நடக்குமா? இரண்டு குடும்பமும் இணைய போகுதா? கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலாவிற்கு நவீன் ஜவுளிக்கடைக்கு வந்தது தெரிந்துவிட, எப்படியாவது நவீனை கடத்தி விட வேண்டும் அவனை கடத்தினால்தான், கார்த்திக்கின் பிளான் தவிடு பொடியாகும் என பிளானை போட்டு போலீசை வர வைக்கிறாள். கார்த்திக்கிற்கு நவீன் ஜவுளிக்கடைக்கு வந்தது தெரிந்துவிட, கார்த்திக் நவீனை துணிக்கடையில் ஒரு இடத்தில் ஒளித்து வைக்கிறான். ஜவுளிக்கடைக்கு வரும் போலீஸ், நவீனை பல இடத்தில் தேடி பார்த்துவிட்டு அவன் கிடைக்காததால் திரும்பி சென்றுவிடுகின்றனர். மறுபக்கம் சிவனாண்டியும் சந்திரகலாவும் எப்படியாவது இந்த நவீனை மாட்டி விட வேண்டும் என திட்டமிடுகின்றனர்.
நவீனை காப்பாற்றி பத்திரமாக அழைத்து வரும் கார்த்திக், நவீன் அறையில் ஒளித்து வைக்கிறான். துர்கா ரூமுக்குள் நவீன் இருப்பதை அறியும் சந்திரகலா அவனை சிக்க வைக்கிறாள். ஆனால், அந்த திட்டத்தை கார்த்திக் தடுத்து நிறுத்துகிறான். மண்டபத்தில் துர்கா திருமணத்திற்கான வேலைகள் நடக்க பரமேஸ்வரி பாட்டி என்ட்ரி கொடுக்கிறார். சாமுண்டீஸ்வரி நீ எதுக்கு இங்க வந்த என்று கேள்வி கேட்க என் பேத்தியோட நல்லதுக்கு நான் வந்து இருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறார்.

கார்த்திகை தீபம்: சந்திரகலா இடையில் புகுந்து பரமேஸ்வரி பாட்டியை கேவலமாக பேசி அவர் கொண்டு வந்த தட்டை தூக்கி வீசி அவமானப்படுத்துகிறாள். சாமுண்டீஸ்வரி மகள்கள் எல்லாரையும் எப்படி மாற்றி வைத்து இருக்கா பாரு என்று சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள். இதனால் கடுப்பான சாமுண்டீஸ்வரி ஒழுங்கு மரியாதையா நீ வெளியே போயிடு என்று விரட்டுகிறாள். பரமேஸ்வரி பாட்டி அவமானப்பட்டு வெளியே வருவதை பார்த்த கான்ஸ்டபிள் எல்லாத்துக்கும் காரணம் நான்தான் என வருத்தப்படுகிறார். எல்லா உண்மைகளையும் சொல்லி பிரச்சனையை சரி செய்ய முடிவு எடுக்கும் கான்ஸ்டபிள் பரமேஸ்வரி பாட்டியிடம் உண்மையை சொல்கிறார்.
நடக்கப்போவது என்ன: கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என திட்டத்துடன் மாயா ஒரு பக்கம் இருக்கிறாள். அதே நேரம் சந்திரகலாவும் இந்த திருமணம் நன்றாக நடக்க கூடாது என அவள் வேறு ஒரு திட்டத்தை போட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால், கார்த்தி நவீனை எப்படியாவது வர வைத்து துர்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என திட்டத்துடன் இருக்கிறார். இதற்காக தன்னுடைய போலீஸ் நண்பரான சரவணன் உதவியை கேட்க சரவணன் பத்திரமாக நவீனை அழைத்துக் கொண்டு மண்டபத்திற்கு வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











