பரமேஸ்வரியின் உயிருக்கு ஆபத்து.. சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிந்ததா? கார்த்திகை தீபம்!
சென்னை: துர்கா திருமணத்திற்கு வந்த பரமேஸ்வரி பாட்டியை கேவலமாக பேசி அவர் கொண்டு வந்த தட்டை தூக்கி வீசி அவமானப்படுத்துகிறாள் சந்திரகலா. உன் மகள்கள் எல்லாரையும் எப்படி மாற்றி வைத்து இருக்கா பாரு என்று சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள். இதனால் கடுப்பான சாமுண்டீஸ்வரி ஒழுங்கு மரியாதையா நீ வெளியே போயிடு என்று விரட்டுகிறாள். பரமேஸ்வரி பாட்டி அவமானப்பட்டு வெளியே வருகிறாள். இதைப்பார்த்த கான்ஸ்டபிள் எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என்று பரமேஸ்வரி பாட்டியிடம் சொல்கிறான். உடனே பரமேஸ்வரி நீ எப்படி காரணம் என்று கேட்கிறாள்.
அப்போது கான்ஸ்டபிள், ஈஸ்வரியின் அம்மா இறந்தது நீங்கள் பேசுவியா வார்த்தையால் இல்லை. அதற்கு முன்பே யாரோ, காபியில் யாரோ விஷத்தை கலந்திருந்தார்கள். அதை குடித்து தான் அவர் உயிரிழந்தார்கள். இது எனக்கு முன்பே தெரியும். இருந்தாலும், நான் இதை சொல்லாமல் மறைத்து விட்டேன். ஆனால், குற்ற உணர்ச்சி என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது. அதற்காகத்தான் உங்களிடம் இந்த உண்மையை இப்போது சொல்கிறேன் என்கிறார். இதைக் கேட்டு கதறி அழுத பரமேஸ்வரி, இந்த விஷயத்தால், இத்தனை ஆண்டுகளாக என் மகனை பிரிந்து, என்னுடைய பேத்திகள் எல்லாரையும் பிரிந்து தனிக்கட்டையாக வாழ்ந்து கொண்டு என அழுகிறான்.

கார்த்திகை தீபம்: உடனே கான்ஸ்டபிள், என்னை மன்னித்துவிடுங்க பாட்டி, இந்த விஷயத்தை வீட்டில் வேறு யாரிடும் சொல்லிவிடாதீர்கள், உங்க பேரன் கார்த்திக்கிடம் மட்டும் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு இதற்கு எல்லாம் காரணம் யார் தெரியுமா என சொல்லும், போது தூரத்தில் முத்துப்பாண்டி மற்றும் சிவனாண்டி வருவதை பார்த்துவிட்டு ஓடிவிடுகிறான். தூரத்தில் இருந்து இருவரும் பேசியதை பார்த்த இவர்கள், பரமேஸ்வரி பாட்டியிடம் இவனுக்கு என்ன பேச்சு என யோசித்துக்கொண்டு இருக்கிறான். உடனே பரமேஸ்வரி, இந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்ரிவிட வேண்டும் என கிளம்புகிறாள்.
வெளியே வரும் நவீன்: மறுபக்கம், நீதிபதிக்கு போன் செய்து எப்படியாவது நவீன் வெளியே வந்துவிட வேண்டும். அவனுக்கு நாளைக்கு கல்யாணம், அவன் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் பெரிய விவரீதமாவிடும் என்று சொல்கிறான். பின்,நவீனை சந்திக்கும் கார்த்திக், உன்னை எப்படியாவது வெளியே எடுத்துடுவேன். கண்டிப்பா உனக்கும் துர்காவுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்கிறான். அதே போல, மாப்பிள்ளை வீட்டு மொத்தமும் ஏமாத்துக்காரங்க தான். அந்த உண்மையை நிரூபித்து உனக்கும் துர்காவிற்கும் நிச்சயம் திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்கிறான். அவன் சொன்னது போலவே, நவீனை வெளியில் கொண்டுவந்து விடுகிறான்.
பாட்டியின் உயிருக்கு ஆபத்து: இந்த விஷயம் சந்திரகலாவுக்கு தெரிய வர, அவள் சிவனாண்டிக்கு ஃபோன் செய்து, நவீன் கார்த்திக் வெளியில் எடுத்து விட்டான், அந்த நவீனும், கார்த்திக்கிற்கும் இங்கே வர கூடாது, ஊதாவது செய்து அவனை தடுத்து நிறுத்து என்று சொல்கிறாள். மறுபக்கம், பரமேஸ்வரி பாட்டியும் கான்ஸ்டபிலும் மண்டபத்திற்கு வருகிறாள். பாட்டி விஷயத்தை சொல்லி இதற்கெல்லாம் ஆதாரம் கான்ஸ்டபிள் தான் என்று சொல்கிறாள். கான்ஸ்டபிள் உண்மையை சொல்ல வரும் சமயத்தில் முத்துவேல் மறைந்திருந்து துப்பாக்கியால் அவனை சுட்டு தள்ளுகிறான். சந்திரகலா சிவனாண்டிக்கு போன் செய்து எங்க அம்மாவை கொன்னது முத்துவேல் தானா என்று கேட்க சிவனாண்டி அது உண்மை இல்ல என்று சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











