ரத்த வெள்ளத்தில் சரிந்த கான்ஸ்டபிள்.. உயிர்தப்பிய ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கான்ஸ்டபிள் பரமேஸ்வரியை பார்த்து அனைத்து விஷயத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறான். உடனே பரமேஸ்வரி இந்த விஷயத்தை நீயே வந்து சாமுண்டீஸ்வரியுடம் சொல் என்கிறாள். நிச்சயம் வரேன் என்று சொன்ன கான்ஸ்டபிள் , தூரத்தில் முத்துப்பாண்டி வருவதை பார்த்து பயந்துவிட்டு முதலில் நீங்கள் மண்டபத்திற்கு போங்க, நான் பின்னாடியே வருகிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறான். கான்ஸ்டபிள் சண்முகம், பரமேஸ்வரி பாட்டியிடம் பேசுவதே தூரத்தில் இருந்து பார்த்துவிட்ட முத்துப்பாண்டி, அவனை கொல்வதற்காக துரத்துகிறான்.

மீண்டும் மண்டபத்திற்கு வரும் பரமேஸ்வரி பாட்டி, சாமுண்டீஸ்வரியிடம் இத்தனை நாட்களாக உன்னுடைய அம்மாவின் மரணத்திற்கு நானும் என் குடும்பமும் தான் காரணம் என நீ சொல்லிக்கிட்டு இருந்த, ஆனால், உண்மையில் நடந்தது என்ன தெரியுமா.. எல்லாத்தையும் அந்த, கான்ஸ்டபிள் சண்முகம் என்னிடம் சொல்லிவிட்டான். உன் அம்மாவிற்கு விஷம் வைத்து கொலை செய்தது முத்துப்பாண்டி தான் என்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அப்போது பதற்றத்துடன் ஓடிவரும் கான்ஸ்டபிள் சண்முகம், பரமேஸ்வரி பாட்டி சொன்னது எல்லாம் உண்மை தான். உங்களுடைய அம்மாவிற்கு காபியுல் விஷத்தை கலந்து கொடுத்துத்தான் யாரோ கொலை செய்து இருக்கிறார்கள். அந்த ரிப்போட்டை நான் தான் மாற்றினேன். இதை செய்தது யார் தெரியுமா என்று சொல்லும் நேரம் பார்த்து, அங்கு வரும் முத்துப்பாண்டி, உண்மை தெரிந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இருக்கிறான். அப்போது, கையில் துப்பாக்கியுடன் மறைந்து இருக்கும் மாயா, ரேவதியை சுடுவதற்காக சரியான நேரத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். இதை பார்த்த முத்துப்பாண்டி அவளது கையைத் தட்டி விட, குண்டு கான்ஸ்டபிள் மீது பாய்ந்து விடுகிறது.

சந்திரகலாவிற்கு வந்த சந்தேகம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கான்ஸ்டபிள் சண்முகத்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். கான்ஸ்டபிள் சொன்னதால், சற்று சந்தேகப்படும் சந்திரலேகா, சிவனாண்டிக்கு ஃபோன் செய்து, என்னுடைய அம்மாவின் சாவிற்கு காரணம் உன் சித்தாப்பா முத்துப்பாண்டியா என கேட்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடையும், சிவனாண்டி இவளுக்கு எப்படி விஷயம் தெரிந்தது என யோசிக்கிறான். அதே சமயம், பதற்றத்தை மனதில் மறைத்துக் கொண்டு. என்ன ஆச்சு சந்திரகலா ஏன் இப்படி கேட்குற, சித்தப்பா ஏன் உங்க அம்மாவை கொலை செய்யப் போகிறார் இன்று சொல்லி சமாளிக்கிறான்.

சுட்டது யார்: அந்த கிழவி பரமேஸ்வரி பாட்டி தான், கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து வந்தா, அவர் தான் இந்த விஷயத்தை சொன்னார் என்கிறாள். உடனே, சிவனாண்டி, பரமேஸ்வரி பாட்டிக்கு எப்படியாவது உங்களுடைய குடும்பத்தில் ஒன்றாக சேர்ந்து, பேதிகளுடன் வாழ வேண்டுமென ஆசை இருக்கிறது. அதற்காகத்தான் ஏதாவது ஒரு கதையை சொல்லிக்கிட்டு இருக்கிறாள், அதை நம்பி நீயும் சித்தப்பாவை சந்தேகப்படுறியா என சொன்னேனும் சந்தரகலா அமைதியாகிறாள். பின் சாமுண்டீஸ்வரியிடம் செல்லும் சந்திரகலா, இந்த பரமேஸ்வரி கிழவி சரியான ஆள், நாம நம்புற மாதிரி எப்படி ஒரு கதையை சொன்னா பாத்தியா என்று சொல்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி இல்ல சந்திரகலா, அவர் சொல்வது உண்மையோ,பொய்யோ எது வேண்டுமானாலும் இருக்கட்டும்,ஆனால் அவரை யார் சுட்டது என்று கேட்கிறாள். உடனே சந்திரகலா அது எனக்கு தெரியாது. ஆனால், நம்ம அம்மாவின் சாவிற்கு காரணம் பரமேஸ்வரி குடும்பம் தான், எப்பவுமே நமக்கு எதிரி அந்த குடும்பம் தான் என ஏற்றிவிடுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X