காணாமல் போன கோவில் சிலை.. சாமுண்டீஸ்வரி மீது விழுந்த பழி..கார்த்திகை தீபம்!
சென்னை: கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க, காளியம்மாள், ஆள கடத்துறது, சகுண தடை ஏற்படுத்துவது இது எல்லாம் செய்தால் கும்பாபிஷேகம் நின்றுவிடும் என நினைக்காதீர்க, அவன் கிட்ட இதெல்லாம் ஒர்கவுட்டாகது. கும்பாபிஷேகம் நிற்கணும்னா அந்த சாமியை கடத்த வேண்டும் என சொல்கிறாள் இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எந்த சாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கப்போகுதோ சாமியை கடத்துவது தான் ஒரே வழி. சாமியை தூக்கித்தான் அந்த கார்த்திக்கிற்கு தண்ணி காட்ட வேண்டும் என சொல்ல அப்போது முத்துவேல், இது நல்ல ஐடியா தான் ஆனால் இதில் பெரிய ரிஸ்க் இருக்கிறது என சொல்கிறார். அப்போது காளியம்மாள் ரிஸ்க் எடுக்கணும் அப்பதான் அந்த கார்த்திக்கை நம்மால் தோற்கடிக்க முடியும் என சொல்கிறார்.
இதையடுத்து, முத்துவேல் மற்றும் சிவனாண்டி ஆகியோர் கோவிலுக்கு சென்று சிலையை கடத்தி வெளியே வரும் நேரத்தில், அந்த வழியாக வந்த கார்த்தியின் கார் ரிப்பேராகி நின்றுவிடுகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் கார் ஸ்டார் ஆகாதால், முத்துவேல், சிவனாண்டி ஆகியோர் கார்த்தியின் கையில் சிக்குவார்களா என்ற பில்டப் வருகிறது. ஆனால், கடைசியில் கார் ஸ்டார் ஆகிவிட கார்த்திக் அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். பின் முத்துவேல் மற்றும் சிவனாண்டி இருவரும், சிலையை லாட்ஜுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். அப்போது முத்துவேல், நம்மிடம் சிலை இருப்பது ரொம்ப ஆபத்து, நாம இந்த சிலையை வச்சிருக்க வேண்டாம் விற்று விடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

கார்த்திகை தீபம்: மறுநாள் காலையில் சாமுண்டீஸ்வரி வீட்டில் அனைவரும் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு கிளம்புகின்றனர். அப்போது, ரேவதி அம்மா நீங்களும் வாங்க, கும்பாபிஷேகத்தில் நீங்களும் இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறாள். ஆனால், சாமுண்டீஸ்வரி என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, நான் வரமாட்டேன் நீங்கள் அனைவரும் போய்ட்டு வாங்க என்று சொல்கிறாள். அதையடுத்து அனைவரும் கும்பாபிஷேகத்திற்கு கிளம்பி செல்கின்றனர். அதேபோல் இங்கே, பரமேஸ்வரி பாட்டி வீட்டிலும் கோவிலுக்கு கிளம்ப தீபாவதி நானும் கும்பாபிஷேகத்திற்கு வருகிறேன். இதுவரைக்கும் கோவில் திருவிழாவை பார்த்ததில்லை என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி சரி வா மா என்று அழைத்துக்கொண்டு கிளம்புகிறாள்.
சாமுண்டீஸ்வரி மேல் விழுந்த பழி: பிறகு எல்லோரும் கோவிலுக்கு வர கோவில் சிலை காணவில்லை, கோவில் பூசாரி கதறிய படி வந்து சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் பாட்டி, அய்யோ கடவுளே, ஆத்தா, இது என்ன சோதனை, ஏன் என் குடும்பத்தை இப்படி சோதிக்கிற என்று வருத்தப்படுகிறாள். அப்பேது, அங்கு இருந்தவர்கள் என்ன பரமேஸ்வரி, கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தில் கோவில் சிலை காணவில்லை என்றால், இந்த ஊருக்கு ஏதோ பெரிய பாதிப்பு வருமே என்று பயமாக இருக்கிறது என்று சொல்கிறார். அப்போது,சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி தான் கோவில் சிலையை தூக்கி இருக்க வேண்டும், அவருக்கு தான் இந்த கும்பாபிஷேகம் நடப்பதில் விருப்பம் இல்லை என்று பழி போட்டு பேசுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











