கும்பாபிஷேகம் நிக்கணும்.. கார்த்திக் அவமானப்படணும்.. காளியம்மாவின் திட்டம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: காளியம்மா டீம், சாமுண்டீஸ்வரிக்கு இந்த கும்பாபிஷேம் நடப்பதில் விருப்பம் இல்லை. இதனால், கும்பாபிஷேகத்தை நிறுத்தி பழியை சாமுண்டீஸ்வரி மீது போட திட்டம் போடுகிறாள். தொடர்ந்து ஊரில் பந்தக்கால் நடுவதால் யாரும் வெளியூருக்கு போக கூடாது, மாமிசம் சாப்பிட கூடாது என்று அறிவிக்கின்றனர். பரமேஸ்வரி பாட்டி, சாமுண்டீஸ்வரி வர மாட்டேன் என்று சொன்னதால் வருத்தப்பட கார்த்திக் அத்தையை கூட்டிட்டு வர வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று வாக்கு கொடுக்கிறான்.
கும்பாபிஷே பத்திரிக்கையில் பாஸ்பரஸ் கெமிக்கலை கலந்து வைக்கிறான். இதை தெரிந்து கொண்ட கார்த்திக், பாலபிஷேகம் செய்ய சொல்லி இந்த திட்டத்தை முறியடிக்கிறான். இதனால், ஆத்திரத்தில் இருக்கும் சந்திரகலா, இந்த கும்பாபிஷேகத்தை நிறுத்தவே முடியாத நாம எது பண்ணாலும் அதற்கு எதிராக ஏதாவது கார்த்திக் பண்ணிக்கிட்டே இருக்கான். எப்படியாவது இந்த கும்பாபிஷேகத்தை நடக்க விடாமல் செய்ய வேண்டும் என சொல்கிறாள். அப்போது சிவனாண்டி, ஏற்கனவே கும்பாபிஷேகம் நின்று விட்டதால் இந்த முறை எந்த விதமான தடங்களும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கார்த்திக்கு ரொம்ப உஷாராகவே வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான், அவனை எப்படி தடுப்பது என்று தான் தெரியவில்லை என்று சொல்கிறான்.

சாமியை கடத்திடலாம்: அப்போது காளியம்மாள், ஆள கடத்துறது, சகுண தடை ஏற்படுத்துறது இது எல்லாம் செய்தால் கும்பாபிஷேகம் நின்றுவிடும் என நினைக்காதீர்கள். அவன் கிட்ட இதெல்லாம் ஒர்கவுட்டாகது. கும்பாபிஷேகம் நிற்கணும்னா அந்த சாமியை கடத்த வேண்டும் என சொல்கிறாள் இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எந்த சாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கப்போகுதோ சாமியை கடத்துவது தான் ஒரே வழி. சாமியை தூக்கித்தான் அந்த கார்த்திக்கிற்கு தண்ணி காட்ட வேண்டும் என சொல்ல அப்போது முத்துவேல், இது நல்ல ஐடியா தான் ஆனால் இதில் பெரிய ரிஸ்க் இருக்கிறது என சொல்கிறார். அப்போது காளியம்மாள் ரிஸ்க் எடுக்கணும் அப்பதான் அந்த கார்த்திக்கை நம்மால் தோற்கடிக்க முடியும் என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











