அவமானப்படுத்திய நவீன்.. தீர்த்துக்கட்ட திட்டம் போடும் சிவனாண்டி.. கார்த்திகை தீபம்!

சென்னை: துர்காவும், நவீனும் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, சிவனாண்டி அவர்களிடம் பிரச்சனை செய்கிறான். இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. அந்த நேரம் பார்த்து, அதே ஓட்டலுக்கு வர, சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் வருகின்றனர். இங்கு நடக்கும் சண்டையை பார்த்துவிட்டு உங்களுக்கு அறிவே இல்லையா? இப்படித்தான் அசிங்கமா ரோட்டில் சண்டை போடுவீர்களா? என கேட்க அப்போது நவீன், அத்தை இவன்தான் தவறாக பேசினான் என சொல்கிறான். அத்தை என நவீன் சொன்னதால் கடுப்பான சாமுண்டீஸ்வரி, யாருடா உனக்கு அத்தை, என்கிட்ட யாரும் உறவு கொண்டாட தேவையில்லை என சொல்கிறாள். ஆனால், நவீன் மீண்டும் அத்தை என அழைத்து. இவன் தவறாக பேசினான் என்று சொல்வதற்குள். மறுபடியும் என்னை அத்தை என்று கூப்பிட்டால் அவ்வளவுதான் என கையை ஓங்கி நவீனை அடிக்க பார்க்கிறாள். அப்போது துர்கா கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடில், கோவத்துடன் வீட்டிற்கு வரும் சாமுண்டீஸ்வரி, ஓட்டலில் நடந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக், அந்த சிவனாண்டிக்கு இதே வேலையா போச்சு, நவீன் அப்படி பட்டவன் இல்லை என்று கார்த்திக் சொல்ல, மாப்பிள்ளை அந்த துரோகியை பத்தி பேசாதீங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். இதையடுத்து, கார்த்திக் நவீனுக்கு போன் செய்து என்ன நடந்தது என்று விசாரிக்க, அப்போது நவீன், சிவனாண்டி வேண்டும் என்ற என்னிடம் வம்புக்கு வந்தான். என்னால் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவனை நான் அடித்துவிட்டேன் என சொல்கிறான். இதைக்கேட்ட கார்த்திக், சிவனாண்டி மோசமானவன், எதற்கும் நீ உஷாராக இருங்க சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: பின் மயில்வாகனம், ஏற்கனவே அந்த சிவனான்டி நம்ம குடும்பத்திற்கு பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருப்பான். இப்போது நவீன் அவனை அடித்து இருக்கிறான். நிச்சயம் சிவனாண்டி நவீனை சும்மா விடமாட்டான் என்கிறான். இதைக்கேட்ட கார்த்திக் பரமேஸ்வரி பாட்டிக்கு போன் செய்து, கொஞ்சம் கவனமாக இருங்க என என்கிறார். இதைக்கேட்டு பதறிப்போன பாட்டி என்னப்பா ஏதாவது பிரச்சனையா என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை பாட்டி என்கிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

நவீனை தாக்கிய சிவனாண்டி: சிவனாண்டியும், முத்துப்பாண்டியும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் சந்திரகலா, நவீனை சும்மா விடக்கூடாது, அவன் உன்மேலையே கை வைத்து இருக்கிறான். அவனை ஏதாவது செய்து அந்த பழியை சாமுண்டீஸ்வரி மீது போட்டுவிட வேண்டும் என அனைவரும் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர். அடுத்த நாள் நவீனை சந்திக்கும் சிவனாண்டி, சாமுண்டீஸ்வரி ஆபிஸ் வந்து உன்னை சந்திக்க சொன்னதாக சொல்ல நவீன் இது உண்மை என நம்பி கிளம்பி செல்கிறான். நவீனை பார்த்த சாமுண்டீஸ்வரி இங்க எதுக்கு வந்த? இன்னொரு முறை என்னை பார்க்க வந்தால் சுட்டு தள்ளிடுவேன் என வார்த்தையை விடுகிறாள். நவீன் வெளியே வந்ததும் அவனை சுற்றி வளைக்கும் சிவனாண்டியும், முத்துப்பாண்டியும் , நவீனை அடித்து மயங்க வைக்கின்றனர். நவீனை புதைத்து அந்த பழியை சாமுண்டீஸ்வரி மீது போட முயற்சி செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X