என் புருஷனை என்ன செய்தீங்க.. நவீன் எங்கே? சாமுண்டீஸ்வரியிடம் கதறிய துர்கா.. கார்த்திகை தீபம்!
சென்னை: நவீன் சும்மா விடக்கூடாது, அவன் உன்மேலையே கை வைத்து இருக்கிறான். அவனை ஏதாவது செய்து அந்த பழியை சாமுண்டீஸ்வரி மீது போட்டுவிட வேண்டும் என சந்திரகலா, முத்துப்பாண்டி அனைவரும் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டுகின்றனர். அடுத்த நாள் நவீனை சிவனாண்டி அடி ஆள் ஒருவன், சாமுண்டீஸ்வரி ஆபிஸ் வந்து உன்னை சந்திக்க சொன்னதாக சொல்ல நவீன் அது உண்மை என நம்பி கிளம்பி செல்கிறான். நவீனை பார்த்த சாமுண்டீஸ்வரி இங்க எதுக்கு வந்த? இன்னொரு முறை என்னை பார்க்க வந்தால் சுட்டு தள்ளிடுவேன் என என்கிறாள். நவீன் வெளியே வந்ததும் அவனை சுற்றி வளைக்கும் சிவனாண்டியும் அவனின் சித்தப்பாவும், நவீனை துரத்துகின்றனர்.
பின் ஒரு கட்டத்தில் நவீனை பிடித்து இருவரும் தாக்குகின்றனர். அப்போது நவீன், தப்பி ஓட அவனை துரத்திச் சென்று கட்டையால் மடையில் அடித்து அவனை ஒரு குழியில் போட்டு புதைத்து விடுகின்றனர். அந்த இடத்திற்கு வரும் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியின் வளையளை அந்த பகுதியில் போட்டு, நவீனை அடித்துக் கொன்றது, சாமுண்டீஸ்வரி தான் என பழி போடுவதற்கான வேலைகளை செய்கிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல்: இன்றைய எபிசோடில், நவீன் வெளியில் சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், பல இடத்தில் நவீனை தேடுகிறாள். அப்போது நவீனுக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் வாக்குவாதம் நடந்தது, சாமுண்டீஸ்வரி நவீனை கொன்று விடுவேன் என மிரட்டியது துர்காவிற்கு தெரிய வர, அவள் நேராக சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து என்னுடைய கணவர் எங்கே என கேட்கிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி, உன்னுடைய புருஷன் எங்கே இங்கே தேடுனா என்ன அர்த்தம் என கேட்கிறாள். அப்போது துர்கா, நீங்கள் கூப்பிட்டதாக ஒருவர் வந்து சொன்னதால்தான், நவீன் வீட்டை விட்டு கிளம்பினார். அவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவே இல்லை. அவருக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் என சொல்கிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி, நான் அவளை கூப்பிடவில்லை, அவன் ஆபிசுக்கு வந்தான், அவனை பார்த்ததும் ஆத்திரத்தில் கொன்றுவிடுவேன் என சொன்னேன் என்கிறாள்.
நவீன் எங்கே: ஏதோ பிரச்சனை நடந்து இருக்கு என தெரிந்து கொண்ட கார்த்திக், துர்காவிடம் நீ கவலைப்படாமல் வீட்டிற்கு போ, நான் நவீன் கண்டுபிடிக்கிறேன் என்கிறார். இதையடுத்து, ஒரு இடத்தில் நவீனும் அதன் அருகில் சாமுண்டீஸ்வரியின் வளையலும் இருந்ததால், சந்தேகப்படும் துர்கா பஞ்சாயத்தை கூட்டி, சாமுண்டீஸ்வரி என்னுடைய கணவர் நவீனை அழைத்து ஏதோ செய்துவிட்டார். அதற்கு ஆதாரமாக என் கணவரின் செல்போன் இருந்த இடத்தில், சாமுண்டீஸ்வரியின் வளையல் இருந்தது. என் கணவர் எங்கே என்று கேட்டு துர்கா கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். இதனால், சாமுண்டீஸ்வரி என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











