உயிருக்கு போராடும் நவீன்.. சாமுண்டீஸ்வரி மீது விழுந்த பழி.. கார்த்திகை தீபம்!

சென்னை: சனிக்கிழமை எபிசோடில், நவீன் வெளியில் சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், பல இடத்தில் நவீனை தேடுகிறாள். அப்போது நவீனுக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் வாக்குவாதம் நடந்தது, சாமுண்டீஸ்வரி நவீனை கொன்று விடுவேன் என மிரட்டியது துர்காவிற்கு தெரிய வர, அவள் நேராக சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து என்னுடைய கணவர் எங்கே என கேட்கிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி, உன்னுடைய புருஷன் எங்கே இங்கே தேடுனா என்ன அர்த்தம் என கேட்கிறாள். அப்போது துர்கா, நீங்கள் கூப்பிட்டதாக ஒருவர் வந்து சொன்னதால்தான், நவீன் வீட்டை விட்டு கிளம்பினார். அவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவே இல்லை. அவருக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் என சொல்கிறாள்.

ஒரு இடத்தில் நவீனின் செருப்பும், அதன் அருகில் சாமுண்டீஸ்வரியின் வளையலும் இருந்ததால், சந்தேகப்படும் துர்கா பஞ்சாயத்தை கூட்டி, சாமுண்டீஸ்வரி என்னுடைய கணவர் நவீனை அழைத்து ஏதோ செய்துவிட்டார். அதற்கு ஆதாரமாக என் கணவரின் செருப்பு இருந்த இடத்தில், சாமுண்டீஸ்வரியின் வளையல் இருந்தது. என் கணவர் எங்கே என்று கேட்டு துர்கா கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். இதனால், சாமுண்டீஸ்வரி என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி, எனக்கும் இந்த விஷயத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, யாரோ என் மீது வீண் பழியை சுமத்த பார்க்கிறார்கள். துர்கா திருமணம் செய்து கொண்டதில் எனக்கு வருத்தம் தான். ஆனால், நவீனை கடத்த வேண்டும் என நான் நினைக்கவில்லை. இது குறித்து நீதிமன்றத்துக்கு செல்வதாக இருந்தாலும் நான் செல்கிறேன். ஏனென்றால் நான், எந்த தவறும் செய்யவில்லை என்கிறாள். அப்போது சந்திரகலா, அந்த வளையளை வாங்கி பார்த்து இது என்னுடைய அக்காவின் வளையல் தான். ஆனால், அது எப்படி இந்த இடத்திற்கு வந்தது என தெரியவில்லை என கூறுகிறாள்.

நவீன் எங்கே : நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்ட கார்த்திக், பஞ்சாயத்து தலைவரிடம், நவீன் செருப்பு இருக்கும் இடத்தல் எப்படி சொல்லிவைத்தது போல இரண்டு வளைகள் இருக்கும். வேண்டுமானால் ஒரு வளையல் தெரியாமல் விழாலாம். இரண்டு வளையலும் எப்படி விழும். இது யாரோ திட்டமிட்டு செய்த சதி போல தான் தெரிகிறது. நிச்சயம் இதில், அத்தைக்கு எந்தவிதமான சம்பந்தமும் இருக்காது அதை நான் கூடிய விரைவில் நிரூபிக்கிறேன். ஆனால், அதற்கு எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என கேட்கிறார். கார்த்திக் சொன்னதை கெட்ட பஞ்சாயத்து காரர்கள் அவகாசம் கொடுப்பதாக சொல்கின்றனர்.

உயிருக்கு போராடும் நவீன்: மறுபக்கம் குழிக்குள் இருக்கும் நவீனுக்கு மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்து, காப்பாற்றுங்கள் என கத்துகிறான். அப்போது பரமேஸ்வரி பாட்டி, சிவனாண்டி தான் வீட்டிற்கு வந்து நவீனை சாமுண்டீஸ்வரி பார்க்க வேண்டும் என சொல்லி அழைத்து சென்ற விஷயத்தை கூறுகிறாள். இதையடுத்து, சிவனாண்டி அந்த இரண்டு நாட்கள் எங்கெங்கு போனார் என்பது குறித்து கார்த்திக் விசாரிக்கார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X