ஆபத்தான நிலையில் துர்கா.. நவீனின் வாக்குமூலத்தால் நடக்கப்போவது என்ன? - கார்த்திகை தீபம்!

சென்னை: நவீன் இறந்துவிட்டதாக வந்த தகவலால் மனம் நொந்துப்போன துர்கா, நவீன் இல்லாத உலகத்தில் இனி நான் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். என்னை கல்யாணம் செய்ததால், அநியாயமாக அம்மா, உன்னை கொன்றுவிட்டார்களே, இதுக்கு மேல நான் உயிரோடு இருக்கக்கூடாது என பூச்சி மருந்தை குடிக்கிறாள். இதை வெளியில் இருந்து பார்த்த ரேவதி எவ்வளவு சொல்லியும் கேட்மால் மருந்தை குடித்து, மயங்கி விழுந்த நிலையில் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்படுகிறாள். பின் ரேவதி,கார்த்திக்கிற்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்ல, கார்த்திக் நவீனுக்கு ஒன்னும் ஆகவில்லை. அவன் நல்லத்தான் இருப்பான் இப்போது கூட என்னிடம் அவன் போனில் பேசினான். நவீன் உயிருடன் தான் இருக்கான், என்கூட பேசிட்டு தான் இருக்கான். நான் உன்கூட பேச வைக்கிறேன் என்று சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

அடுத்ததாக கார்த்திக் நவீனுக்கு ஃபோன் செய்து துர்காவிடம் பேச வைக்க முயற்சி செய்ய அதற்குள் சந்திரகலா தரப்பில் இருந்து சிம் கார்ட் கம்பெனிக்கு போன் செய்து அந்த சிம்மை பிளாக் செய்து விடுகின்றனர். துர்காவிடம் ஃபோனை கொடுக்க போகும் சமயத்தில் ஃபோன் கட்டாகி விடுகிறது. அடுத்து நவீனுக்கும் நீண்ட நேரமாக பெட்டிக்குள் அடைபட்டு கிடப்பதால் மூச்சு திணறல் உருவாகிறது. ஸ்டேஷனில் இருக்கும் சாமுண்டீஸ்வரிக்கு சாப்பாடு கொடுக்க அவள் சாப்பிட மறுக்கிறாள். கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் ஒரு கோயிலுக்கு வந்திருக்கின்றனர். அப்போது கேட்கும் மணி சத்தத்தை வைத்து நவீனை தேடி செல்கின்றனர். ஆனால் நவீனை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது.

கார்த்திகை தீபம்: எந்த இடத்தில் புதைத்தார்கள் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது, கார்த்திக், மயில்வாகனத்திடம் நிச்சயம் பள்ளம் தோண்ட கடப்பாரை, மம்முட்டியை பயன்படுத்தி இருப்பார்கள். அதை கடையில் யாராவது வாங்கினார்களா என்று விசாரித்து பார்க்கலாம் என்று அந்த பகுதியில் இருக்கும் கடைசியில் விசாரிக்கின்றனர். அப்போது, குமேரசன் என்பவரிடம் சந்தித்து விசாரிக்க, ஒரு கும்பல் 5000 கொடுத்து பொருட்களை வாங்கி சென்றதாக சொல்கிறார். மேலும் அதில் ஒருவனின் பெயர் குமார் எனவும் சொல்கிறான். அந்த நபர் கொடுத்த தகவலின்படி, கார்த்திக் குமாரை தேடி கண்டுபிடித்து, அவளை அடித்து விசாரிக்க அவன் நவீனை புதைத்த இடத்தை காட்டுகிறான். மேலும், இது எல்லாத்தையும் செய்ய சொன்னது சிவனாண்டி தான் என்ற உண்மையை சொல்கிறான். பின் கார்த்திக், அந்த இடத்தை தோண்டி பெட்டியை வெளியில் எடுத்து நவீனை காப்பாற்றுகிறான். பிறகு நவீனை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்து துர்காவிடம் பேச வைத்து அவளையும் காப்பாற்றுகிறான்.

நவீன் கொடுத்த வாக்கு மூலம்: அதன்பின், கார்த்திக் நவீனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறார். அப்போது நவீன், சாமுண்டீஸ்வரி அத்தைக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னை கொல்ல முயற்சி செய்தது சிவனாண்டி தான், அவன் தான் என் தலையில் அடித்து மயக்கமடையச் செய்தான், அந்த பழியை அத்தை மீது போட்டு விட்டார் என்று வாக்குமூலம் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X