நவீன் கொடுத்த வாக்குமூலம்.. தலைமறைவான சிவனாண்டி.. கார்த்திகை தீபம்!
சென்னை: குழியில் புதைத்து வைத்து இருந்த நவீனை எப்படியோ கண்டுபிடித்து கார்த்திக் காப்பாற்றி விடுகிறான். நவீனை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்து துர்காவிடம் பேச வைக்கிறான், நவீனை பார்த்த துர்கா நிம்மதி அடைகிறான். அதன்பின், என்னை இந்த நிலைமைக்கு ஆக்கியது, அத்தை இல்லை, அந்த சிவனாண்டி தான் என்று சொல்கிறான். அதன்பின், கார்த்திக் நவீனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறான். அப்போது நவீன், சாமுண்டீஸ்வரி அத்தைக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னை கொல்ல முயற்சி செய்தது சிவனாண்டி தான், அவன் தான் என் தலையில் அடித்து மயக்கமடையச் செய்து, பெட்டிக்குள் வைத்து என்னை கொலை செய்துவிட்டு, அந்த பழியை அத்தை மீது போடப் பார்த்தான் என்று வாக்குமூலம் கொடுக்கிறான்.
நவீன் கொடுத்த வாக்குமூலத்தால் சாமுண்டீஸ்வரி வெளியே வருகிறாள். நவீனை தவறாக புரிந்து கொண்டேமே என்பதை நினைத்து வருத்தப்படுகிறாள். நவீன் மீது அவளுக்கு ஒரு அன்பு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் துர்கா மருத்துவமனையில் இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறாள். மேலும், போலீசிடம் சிவனாண்டியை சும்மா விடக்கூடாது. அவன் வெளியில் இருந்தால் துர்காவிற்கும் நவீனுக்கும் நிச்சயம் ஆபத்து வரும் அவனை சீக்கிரமாக கைது செய்ய வேண்டும் என சொல்கிறாள்.

கார்த்திகை தீபம்: போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்து கொண்டு இருக்க, சந்திரகலாவின் கை ஆள் ஒருவன், சந்திரகலாவிற்கு ஃபோன் செய்து, கார்த்திக் நவீனையை காப்பாற்றி அழைத்து வந்து விட்டான். சிவனாண்டி தான் அனைத்திற்கும் காரணம் என நவீன் வாக்குமூலம் கொடுத்து விட்டான். சிவனாண்டியை பிடிப்பதற்காக போலீஸ் டீம் வருவார்கள் அவரை ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள் என சொல்கிறான். இதைக் கேட்டது பதறிப் போன சந்திரகலா, சிவனாண்டிக்கு ஃபோன் செய்து வெளியில் என்ன நடக்குதுனு உனக்கு தெரியுமா... கார்த்தி, நவீன் காப்பாற்றி விட்டான், நாம போட்ட திட்டம் எல்லாம் வீணாகிவிட்டது.
தலைமறைவான சிவனாண்டி: அது மட்டுமில்லாமல் போலீஸ் ஸ்டேஷனில், என்னை கொல்லப்பார்த்தது சிவனாண்டியும் அவனின் சித்தப்பா தான் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். இப்போ போலீஸ் டீம் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். எந்த நேரத்திலு உன்னை கைது செய்வார்கள், இங்கே இருக்காதே வேறு எங்கையாவது சென்று தலைமறைவாக கொஞ்ச நாளைக்கு இரு, ஃபோனை வைத்து தான் போலீஸ் கண்டுபிடிப்பார்கள் அதனால் அந்த போனை பயன்படுத்தாதே என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறாள். இதைக்கேட்டு பதறிப்போன சிவனாண்டியும் அவனின் சித்தப்பாவும் தலைமறைவாகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











