ரேவதி கார்த்தி வாழ்க்கையில் எமனாக வரும் சாமுண்டேஸ்வரி.. உண்மை தெரியவருமா? கார்த்திகை தீபம்!
சென்னை: போலீஸ் ஸ்டேஷனில், என்னை கொல்லப்பார்த்தது சிவனாண்டியும் அவனின் சித்தப்பா தான் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். இப்போ போலீஸ் டீம் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். எந்த நேரத்திலு உன்னை கைது செய்வார்கள், இங்கே இருக்காதே வேறு எங்கையாவது சென்று தலைமறைவாக கொஞ்ச நாளைக்கு இரு, ஃபோனை வைத்து தான் போலீஸ் கண்டுபிடிப்பார்கள் அதனால் அந்த போனை பயன்படுத்தாதே என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறாள். இதைக்கேட்டு பதறிப்போன சிவனாண்டியும் அவனின் சித்தப்பாவையும் போலீசார் கைது செய்கின்றனர்.
நவீனை கடத்தியது சாமுண்டீஸ்வரி இல்லை என தெரிந்த துர்கா அம்மாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக துர்காவும் நவீனும் வீட்டுக்கு வருகின்றனர். இவர்களை பார்த்து ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி. என் மீது புகார் கொடுத்து விட்டு, என்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு இப்போது மன்னிப்பு கேட்க வீட்டுக்கு வருகிறாயா... என்னைக்குமே நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன். என் முகத்திலேயே முழிக்காத, இனி இந்த வீட்டு வாசப்படியில் கால் வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறாள். இதனால் நவீன் துர்கா இருவரும் வருத்தப்பட்டு வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.

கார்த்திகை தீபம்: இதைத்தொடர்ந்து டிடெக்டிவ்வான தீபாவதி, சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் ஆதார் எண் ஒன்றாக தான் இருக்கும். அதை வைத்து ஈஸியாக ராஜா யார் என்ன என்பதை கண்டுபிடித்து விடலாம். இதனால் ராஜாவிடம் இருந்து ஆதார் கார்டை வாங்கி எனக்கு அனுப்புங்கள் அதை வைத்து, நான் அவர் யார் என்று கண்டுபிடித்து விடுகிறேன் என சொல்கிறாள் தீபாவதி. ஆனால் சாமுண்டீஸ்வரி, திடீரென நான் எப்படி மாப்பிள்ளையிடம் ஆதார் கார்டை கேட்பது என சொல்ல தீபாவதி அதற்கான ஐடியாவையும் கொடுக்கிறார்.
நடக்கப்போவது என்ன: டிடெக்டிவ் தீபாவதி சொன்னது போல, சாமுண்டீஸ்வரி பேக்டரியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போனஸ் தரவேண்டும், அதற்காக வங்கியில் பணம் எடுக்க வேண்டும், வங்கியில் உங்களுடைய ஆதார் கார்டை கேட்கிறார்கள் என்று சொல்லி, கார்த்திக்கிடம் ஆதார் கார்டு தேவைப்படுகிறது என சொல்ல கார்த்திக் ஆதார் கார்டை கொடுக்கிறார். எதற்காக, ஆதார் கார்டை கேட்கிறார்கள் என்பதை கார்த்திக் புரிந்து கொண்டாலும் மறுக்க முடியாமல் அந்த ஆதார் கார்டை கொடுக்கிறார். அதை சாமுண்டீஸ்வரி தீபாவதிக்கு அனுப்பி வைக்கிறாள். மறுபக்கம் தீபாவளிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது கார்த்திக், ரேவதி இருவருக்கும் தலை தீபாவளி என்பதால் ரேவதி அழகாக புடவை கட்டிக்கொண்டு கார்த்திக்கிடம் நான் எப்படி இருக்கிறேன் என கேட்கிறாள்.
இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க சாமுண்டீஸ்வரி, என் மகள் ரேவதி வாழ்க்கையில் இப்போது தான் நல்லபடியாக சென்று கொண்டு இருக்கிறது அந்த, வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது. நான் நினைத்தது போல ராஜசேதுபதியின் பேரனாக கார்த்திக்கு இருக்கக் கூடாது என மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











