சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரியவருமா? கார்த்திக் எடுத்த முடிவு.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் கம்பெனியில் 40% அளவிற்கு லாபம் கிடைத்து இருப்பதால், அதில் 20 சதவீதத்தை தொழிலாளர்களுக்கு போனசாக கொடுக்கலாம் என கார்த்திக் சொல்லுகிறார். சாமுண்டீஸ்வரியும் அப்படியே செய்துவிடலாம் மாப்பிள்ளை என சொல்கிறாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சந்திரகலா, சாமுண்டீஸ்வரி தனியாக அழைத்து, தொழிலாளர்களுக்கு 20% போனஸ் கொடுப்பது சரி இல்லை, நஷ்டமானபோது அவர்கள் அதில் பங்கு எடுத்துக் கொண்டார்களா? இது தேவையில்லாத வேலை என சொல்கிறாள். ஆனால், சாமுண்டீஸ்வரி தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் தொழில் நன்றாக நடக்கும். மாப்பிள்ளை சொல்வது தான் சரி என்கிறாள். பின் வீட்டிற்கு வந்த தொழிலாளர்களிடம், லாபத்தில் நான் உங்களுக்கு 20 சதவீதத்தை போனசாக தருகிறேன். நாளைக்கு இதே நேரத்தில் நான் உங்களுக்கு போனஸ் தருகிறேன் என சொல்லி அனைவரையும் அனுப்பி வைக்கிறாள்.

சந்திரகலா இந்த விஷயத்தை காளியம்மாளிடம் சொல்லி, நாளுக்கு நாள் அந்த டிரைவரின் செல்வாக்கு வீட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறாள். அப்போது காளியம்மாள் ஒரு திட்டத்தை போடுகிறாள். அதாவது தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பதற்காக நிச்சயம் சாமுண்டீஸ்வரி பேங்கிற்கு சென்று பணத்தை எடுப்பார் அந்த பணத்தை சாமுண்டீஸ்வரிக்கு கிடைக்காமல் செய்துவிட்டால் தொழிலாளர்கள் முன்னிலையில் சாமுண்டேஸ்வரி அவமானப்பட்டு நிற்பாள். இது அனைத்திற்கும் காரணம் கார்த்திக் தான் என நாம் தொழிலாளர்களிடம் ஏத்திவிட்டு கார்த்திக்கின் மானத்தை வாங்க வேண்டும் என காளியம்மாள் சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அவர்கள் நினைத்தது போலவே சாமுண்டீஸ்வரி வங்கிக்கு சென்ற ஐந்து கோடி ரூபாயை வங்கியில் இருந்து எடுக்க வேண்டும் என சொல்கிறாள். அப்பொழுது, வங்கி அதிகாரி, இதற்கு மேனேஜர் தான் கையெழுத்து போட வேண்டும் அவர் இப்போது இல்லை என்று சொல்லியால், சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு கிளம்புகிறாள். இதை மறைந்திருந்து கேட்ட முத்துபாண்டியும் அவனது சித்தப்பாவும் எப்படியாவது மேனேஜரிடம் பணத்தை கொடுத்து இதில் கையெழுத்து போட விடாமல் செய்து விட வேண்டும் என திட்டம் போடுகிறான். மறுபக்கம், டிடெக்டிவ்வான தீபாவதி, சாமுண்டீஸ்வரிக்கு போன் செய்து கார்த்திக்ன் ஆதார் கார்டை கேட்கிறாள். அதை எப்படி வாங்குவது என்று யோசித்த சாமுண்டீஸ்வரி, தொழிலாளர்களுக்கு போனஸ் தரவேண்டும், அதற்காக வங்கியில் பணம் எடுக்க வேண்டும், வங்கியில் உங்களுடைய ஆதார் கார்டை கேட்கிறார்கள் என்று சொல்லி, கார்த்திக்கிடம் ஆதார் கார்டு தேவைப்படுகிறது என சொல்ல கார்த்திக் ஆதார் கார்டை கொடுக்கிறார். எதற்காக, ஆதார் கார்டை கேட்கிறார்கள் என்பதை கார்த்திக் புரிந்து கொண்டாலும் மறுக்க முடியாமல் அந்த ஆதார் கார்டை கொடுக்கிறான். அதை சாமுண்டீஸ்வரி தீபாவதிக்கு அனுப்பி வைக்கிறாள்.

கார்த்திக் எடுத்த முடிவு: இதையடுத்து கார்த்திக், ரேவதி மற்றும் மாமாவிடம் அத்தை உண்மையை கண்டுபிடிக்கிறதுக்குள்ள நானே அவங்களிடம் உண்மையை சொல்லிடனும் என முடிவெடுக்கிறான். மேலும் அந்த கான்ஸ்டபிளின் செல்போன் கிடைத்து விட்டால் எல்லாத்திற்கும் தீர்வு கிடைத்தவுடன் என்று பேசிக் கொள்கின்றனர். அடுத்ததாக சாமுண்டீஸ்வரி செல்ஃபோன் கடைக்கு போன் செய்து போன் என்னாச்சு என்று விசாரிக்க போன் ரெடி ஆகிவிட்டதாக சொல்கின்றனர். தனது வீட்டு முகவரியை குறித்து டெலிவரி செய்ய சொல்கிறாள். கடைக்காரனும் அதே போல் போனை டெலிவரி செய்ய சாமுண்டீஸ்வரி அதை பணம் கொடுத்து வாங்குகிறாள். இதை சந்திரகலா கவனிக்கிறாள். அதன் பிறகு சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் அந்த போனை தூக்கி தெருவில் வீசுகிறாள். மீண்டும் அங்கே வந்த சாமுண்டீஸ்வரி போன் காணாமல் போனதை கவனிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X