பணத்திற்காக அல்லாடும் சாமுண்டீஸ்வரி.. சிவனாண்டியின் சதியை முறியடித்த கார்த்திக்? கார்த்திகை தீபம்!
சென்னை: தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பதற்காக சாமுண்டீஸ்வரி வங்கிக்கு சென்று ஐந்து கோடி ரூபாயை வங்கியில் இருந்து எடுக்க வேண்டும் என சொல்கிறாள். அப்பொழுது, வங்கி அதிகாரி, இதற்கு மேனேஜர் தான் கையெழுத்து போட வேண்டும் அவர் இப்போது இல்லை என்று சொல்லியால், சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்துவிடுகிறாள். சாமுண்டீஸ்வரி பணம் இல்லாமல் தொழிலாளர் முன் அவமானப்படுத்த நினைத்த முத்துபாண்டியும் அவனது சித்தப்பாவும் மேனேஜருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட அவர் மயக்கத்தில் இருக்கிறார்.
மீண்டும் வங்கிற்கு போகும் சாமுண்ஸ்டீஸ்வரி பேங்க் மேனேஜர் வராத காரணத்தினால் பேங்கில் பணம் கிடைக்காமல் போகிறது, அசிஸ்டன்ட் மேனேஜர் பேங்க் மேனேஜர் கையெழுத்து இல்லாமல் பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார். இதனால் சாமுண்டீஸ்வரி தனக்கு தெரிந்த சேட்டுவிடம் பணத்தை வாங்கி தொழிலாளிகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்து விடலாம் என்று முடிவெடுக்கிறாள். பின் சாமுண்டீஸ்வரி சேட்டுக்கு போன் போட்டு பணத்தை கேட்க அவரும் வாங்க மேடம் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அங்கு கிளம்பி செல்கிறாள். இந்த விஷயத்தை சந்திரகலா, சிவனாண்டியிடம் சொல்லிவிட
சிவனாண்டி சேட்டு மகனை கடத்தி வைத்துக்கொண்டு, சாமுண்டீஸ்வரிக்கு பணம் தரமுடியாது என்று சொல்ல சொல்கிறான். சேட்டும் பயத்தில், சாமுண்டீஸ்வரியிடம் நீங்க கேக்குற பணம் இல்லை என்று ஜகா வாங்குகிறார். இதனால் சாமுண்டீஸ்வரி ஏமாற்றத்துடன் வெளியே வருகிறாள்.

கார்த்திகை தீபம்: கார்த்திக் இதெல்லாம் சிவணாண்டியின் திட்டமாக இருக்கும் என சந்தேகப்படும் கார்த்திக், தனது தம்பியிடம் போன் போட்டு 5 கோடி ரூபாய் பணம் உடனடியாக தேவை என சொல்கிறான். இதைக்கேட்டு கார்த்திக் தம்பி எதற்காக இவ்வளவு பணம் என கேட்க, நடந்த விஷயத்தை அனைத்தையும் கார்த்திக் சொல்லுகிறான் உடனே கார்த்தியின் தம்பி, ஏற்கனவே சாமுண்டீஸ்வரி அத்தைக்கு உன் மேல் சந்தேகம் இருக்கிறது. இந்த நேரத்தில் இவ்வளவு பணத்தோடு நீ சென்றால் நிச்சயமாக உண்மை தெரிதுவிடும் என்கிறான். உடனே கார்த்திக் நான் ஒரு அருமையான திட்டத்தை வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். பின் கார்த்திக் கேட்ட 5 கோடி பணம் கார்த்திக்கிடம் வந்து சேருகிறது.
நடந்தது என்ன: அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மேனேஜரின் வீட்டுக்கு செல்லும் கார்த்திக், அங்கு அவர் மயக்கத்தில் இழுந்து எழுப்பி விஷயத்தை சொல்லி, தான் கொண்டு வந்த பணத்தைசாமுண்டீஸ்வரிடம் கொடுக்க சொல்கிறான். இதையடுத்து அனைவரும் சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு செல்கின்றனர். அப்போது அங்கு தொழிலாளர்கள் போனசை வாங்குவதற்காக காத்துக் கொண்டு இருக்க பணப்பெட்டியுடன் கார்த்திக் வந்ததை பார்த்த சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் எத்தனை முறை நான் சொன்னேன், இவன் ராஜசேதுபதியின் பேரன், அபிராமியின் மகன் என்று, ஆனால் நீ கேட்கவே இல்லை, உன்னால் ரெடி செய்ய முடியாத பணத்தை கார்த்தியால் எப்படி ரெடி செய்ய முடிந்தது என கேள்வி கேட்கிறாள். உடனே கார்த்திக்கு, அத்தை இது உங்களுடைய பணம் தான் மேனேஜரை நான் வீட்டிற்கு போய் பார்த்து விஷயத்தை சொல்லி வாங்கி வந்தேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











