ரேவதியை ஏற்றுக்கொண்டு கட்டி அணைத்த கார்த்தி.. சந்திரகலா அதிர்ச்சி.. கார்த்திகை தீபம்!

சென்னை: வீட்டிற்கு பணத்துடன் வரும் கார்த்திக். சாமுண்டீஸ்வரியிடம் தொழிலாளர்களுக்கு போனசை கொடுக்க சொல்கிறான். பணப்பெட்டியுடன் கார்த்திக் வந்ததை பார்த்த சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் எத்தனை முறை நான் சொன்னேன், இவன் ராஜசேதுபதியின் பேரன், அபிராமியின் மகன் என்று, ஆனால் நீ கேட்கவே இல்லை, உன்னால் ரெடி செய்ய முடியாத பணத்தை கார்த்தியால் எப்படி ரெடி செய்ய முடிந்தது என கேள்வி கேட்கிறாள். உடனே கார்த்திக்கு, அத்தை இது என் அம்மா எனக்காக வாங்கி வைத்து இருந்த நிலத்தை விற்றுவிட்டேன் என்கிறான்.

இதைக்கேட்ட சந்திரகலா, கோடி கணக்கில் நிலத்தை விற்கும் அளவிற்கு உனக்கு சொத்து இருந்தால் எதற்காக, எங்கே வீடில் டிரைவராக வேலை பார்க்க வந்த, ஒழுங்கா உண்மைய சொல்லு எல்லா உண்மையும் எனக்கு தெரியும் என சொல்கிறாள். அப்போது கார்த்திக், என்னுடைய அம்மாவிற்கு ஒரு ஆசிரமம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அதற்காக இந்த இடத்தை வாங்கி வைத்திருந்தார்கள். எந்த சூழ்நிலையிலம், இந்த நிலத்தை விற்கக் கூடாது என சொல்லி இருந்தார்கள். தற்போது தொழிலாளர்களுக்காக இந்த நிலத்தை நான் விற்று இருக்கிறேன் என சொல்கிறான். இதை கேட்ட சாமுண்டேஸ்வரி, சந்திரகலா தேவையில்லாமல் எதுவும் பேசாதே மாப்பிள்ளை நல்ல விஷயத்தை தான் செய்து இருக்கிறார் என சொல்கிறாள். பின், அனைவருக்கும் போனஸ் கொடுக்கப்படுகிறது.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அதைத்தொடர்ந்து ரேவதியை கார்த்தி இருவரும் தனியாக அறையில் இருக்கின்றனர். அப்போது, ரேவதி அம்மா கொடுத்த இடத்தை எதற்காக வித்தீங்க என கேட்கிறாள். உடனே கார்த்திக், தொழிலாளர்கள் தான் முக்கியம், அந்த இடத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என சொல்கிறான். உடனே, ரேவதி, அனைவர் மனதும் புரிந்து கொண்டு நடக்கிறீர்கள், ஆனால், என் மனசு தான் உங்களுக்கு புரியவில்லை என சொல்லி வருத்தப்படுகிறாள். அப்போது, கார்த்திக் உன்னுடைய மனசும் எனக்கு தெரியும் என ரொமான்டிக்காக பேசி ரேவதியை கட்டி அணைக்கிறான். கார்த்திக் மனசு மாறியதை நினைத்து ரேவதி மகிழ்ச்சி அடைகிறாள். மறுபக்கம் சாமுண்டீஸ்வரி சொன்னது போல வீட்டில் சிசிடிவி பொருத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. இதை பார்த்த சந்திரகலா இந்த விஷயத்தை சிவனாண்டியிடம் சொல்கிறாள். இனிமேல் நாம் இந்த வீட்டில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், சாமுண்டீஸ்வரி சிசிடிவி கேமராவை பொருத்திவிட்டால் என்ன சொல்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X