நாட்டு வெடிகுண்டால் வரப்போகும் விபரீதம்? கார்த்திக் உயிர் தப்புமா? கார்த்திகை தீபம்!
சென்னை: பரமேஸ்வரி வீட்டுக்கு வந்த டிடெக்டிவ் தீபாவதி, பாட்டி தூங்கியதும் கார்த்திக் குறித்த ஆதாரம் ஏதாவது வீட்டில் கிடைக்கிறதா என அலசுகிறாள். திடீரென பரமேஸ்வரி பாட்டி தண்ணீர் குடிக்க எழுந்து வர தீபாவதி சந்தேகம் வராமல் படுத்துக்கொண்டு பாட்டியை ஏமாற்றி தப்பித்துக்கொள்கிறேள். அடுத்த நாள் காலையில் சாமுண்டீஸ்வரி வீட்டில் கார்த்திக் ரேவதி தல தீபாவளியை கொண்டாட தயாராகின்றனர். இங்கே துர்கா நவீன் வெளியில் கிளம்ப பரமேஸ்வரி பாட்டி சந்தோஷமா போயிட்டு வாங்க என்று வாழ்த்தி அனுப்புகிறார்.
அதன்பின், தீபாவதியிடம் இரண்டு பேரும் வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்போ அவ அம்மா கையால துணி வாங்கிட்டு வர்றதுக்காக போறாங்க என்று சொல்ல தீபாவதி அது எப்படி முடியும் என்று கேட்க அங்கே, என் பேரன் ராஜா இருக்கான் அவன் மனசு வச்சா எல்லாம் நடக்கும் என்று சொல்கிறாள். இங்கே சாமுண்டீஸ்வரி கார்த்திக் ரேவதியிடம் மோதிரத்தை கொடுத்து இருவரையும் மாற்றிக்கொள்ள சொல்கிறாள். ரோகினி துர்கா இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்று வருத்தப்படுகிறாள். அப்போது மயில்வாகனம், நீ கவலைப்படாதே ரேவதி, மாப்பிள்ளை அதற்கும் ஒரு ஏற்பாடு செய்துவிட்டார் கோவிலுக்கு துர்காவையும் ரேவதியை வர சொல்லி இருக்கிறார். அங்கு, அத்தை தன் கையாலேயே துர்காவிற்கு சீர் தருவாங்க என்கிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கோவிலில் சாமுண்டீஸ்வரி எல்லாருக்கும் தீபாவளி பரிசாக துணியையும் பணத்தையும் கொடுக்கிறார். அந்த வரிசையில். நவீன் மற்றும் துர்காவும் நிற்க இவர்களை பார்த்த சாமுண்டீஸ்வரி கோவம் கொண்டாலும், எல்லாருக்கும் கொடுப்பது போல் துணியையும் பணத்தையும் அவர்களுக்கும் கொடுக்கிறாள். இதனால் நவீன், துர்கா சந்தோசப்படுகின்றனர்.
அடுத்து நடங்கப்போவது என்ன?: பின் அனைவரும், வீட்டில் வந்து உட்கார்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு வெடி வெடிக்க செல்கின்றனர். அப்போது, மயில்வாகனம் வெடியை வைத்து சந்தோஷகமாக இருக்கிறான். உடனே சாமுண்டீஸ்வரி, கார்த்திக்கிடம் மாப்பிள்ளை உங்களுக்குத்தான் தல தீபாவளி, உங்களுக்கான ஸ்பெஷலா வாங்கி வந்த மாப்பிள்ளை வெடியை வெடிங்க என்று சொல்லி, கார்த்திக் சிவனாண்டி வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்த நாட்டு வெடிகுண்டை பட்டாசு என நினைத்து கொளுத்த செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











