நான் ராஜா சேதுபதியின் பேரன்.. உண்மையை உடைத்த கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு வெடி வெடிக்க செல்கின்றனர். அப்போது, மயில்வாகனம் வெடியை வைத்து சந்தோஷகமாக இருக்கிறான். உடனே சாமுண்டீஸ்வரி, கார்த்திக்கிடம் மாப்பிள்ளை உங்களுக்காக ஸ்பெஷலாக மாப்பிள்ளை வெடியை வாங்கி வந்து இருக்கிறேன். அதை வெடிங்க என்று சொல்ல, கார்த்திக் சிவனாண்டி வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்த நாட்டு வெடிகுண்டை பட்டாசு என நினைத்து கொளுத்த செல்கிறான்.
இன்றைய எபிசோடில், கார்த்திக் நெருப்பு வைக்க போகும் சமயத்தில் ரேவதி திடீரென எனக்கு உடம்பு முடியல மயக்கமாக இருக்கு என்று சொல்விட்டு மயங்கி விழ போக கார்த்திக் ஓடிவந்து தாங்கிப் பிடிக்கிறான். வெடியை வெடிக்காமல், கார்த்திக் ரேவதியை அழைத்து வந்து அறையில் படுக்க வைக்கிறான். அந்த நேரத்தில் காலில் ஏதோ தட்டுப்பட அது என்ன என்று பார்க்கும் போது, அந்த செயின் லாக்கெட்டில், முத்துவேலின் போட்டோ இருப்பதை கவனிக்கிறான். இதனால், முத்துவேல் வீட்டுக்கு வந்ததை தெரிந்து கொண்ட கார்த்திக், நிச்சயம் ஏதோ திட்டத்தோடு தான் வந்து இருப்பான் என்று யோசித்துப்பார்க்கிறான்.

கார்த்திகை தீபம்: அந்த நேரத்தில்,சாமுண்டீஸ்வரி நாட்டு வெடிகுண்டை வெடிக்கப் போக அத்தை ஒரு நிமிஷம் என்று தடுத்து நிறுத்துகிறான் கார்த்தி. பின் விஷயத்தை சொல்லிவிட்டு, அந்த நாட்டு வெடிகுண்டை எடுத்துக் கொண்டு முத்துவேல் மற்றும் சிவனாண்டி இருக்கும் வீட்டிற்கு வந்து நாட்டு வெடிகுண்டைவெடிக்கிறான். இதில், இருவரும் கருகிப் போகின்றனர். பிறகு சந்திரகலாவை அழைத்து, இது தான் உனக்கு கடைசி வார்னிங் இதற்கு மேல் என் குடும்பத்திற்கு ஏதாவது பிரச்சனை பண்ண அவ்வளவு தான் என சொல்கிறான்.
நடந்த விபரீதம்: வீட்டிற்கு வரும் கார்த்திக், இந்த பிரச்சனை எல்லாம் நாம் உண்மை மறைப்பதால் தான் நடக்கிறது. இதனால், எல்லா உண்மையை அத்தையிடம் சொல்லிவிடலாம் என முடிவு செய்து சாமுண்டீஸ்வரியிடம் சென்று, உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லணும் என்று சொல்லி நான் தான் ராஜா சேதுபதியின் பேரன் என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். மேலும் கார்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல, ரேவதி அவர் இல்லாத இந்த வீட்டில் எனக்கு மட்டும் என்ன வேலை நானும் அவரோடு சேர்ந்து வீட்ட விட்டு வெளியே போயிடுவேன் என்று சொல்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி நீ வீட்டை விட்டு வெளியே போனா நான் சுட்டுகிட்டு செத்துப் போயிடுவேன் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











