கார்த்தியை வீழ்த்த நடக்கும் சதி.. கும்பாபிஷேகத்தில் நடக்க இருக்கும் களேபரம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திக் உண்மை சொன்ன நிலையில், சாமுண்டீஸ்வரி கார்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல ரேவதியும் நானும் செல்வேன் என்று சொல்கிறாள், சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை எடுத்து நீ வெளியே போனால் சுட்டுக்கிட்டு செத்து போய்டுவேன் என்று மிரட்டுகிறாள். கடைசியில் இது ரேவதியின் கனவு என தெரிய வருகிறது.
இதையடுத்து, கார்த்திக் கோவில் கும்பாபிஷேக வேலைகளை தொடங்கலாம் என்று சொல்ல ஆளாக்கு ஒரு பொறுப்பை எடுத்து கொள்கின்றனர். விரதம் முடியும் வரை ஒருவேளை மட்டுமே உணவு உண்பேன் என்கிறார் முடிவு செய்கிறான் கார்த்திக். இதனால், ரேவதியும் விரதம் இருக்கிறாள். இரவு தூக்கும் போது, ஆப்ரேஷன் செய்த இடத்தில் வலி அதிகமாக இருக்க, வலி தாங்கமுடியாமல் அழுகிறாள். இதைப்பார்த்து கார்த்திக், நீ சாப்பிட்டு மாத்திரையை போடு என சொல்லி, ரேவதிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு, மாத்திரையை கொடுத்து ரேவதியை தூங்க வைக்கிறாள்.

கார்த்திகை தீபம்: மறுநாள் காலை கும்பாபிஷேக பத்திரிகையை கோவிலில் வைத்து பூஜை செய்ய ஏற்பாடு நடக்க,இதை தெரிந்து கொண்ட முத்துவேல், அந்த பத்ரிக்கையில் பாஸ்பரஸ் கெமிக்கலை கலந்து வைக்கிறான். இதை தெரிந்து கொண்ட கார்த்திக், பத்திரிகையையும் வைத்து பாலபிஷேகம் செய்ய சொல்லி இந்த திட்டத்தை முறியடிக்கிறான். அதன் பின், ஊர் தலைவரான சாமுண்டீஸ்வரிக்கு முதல் பத்திரிக்கையை வைக்கலாம் என்று முடிவெடுத்து கார்த்திக் பத்திரிக்கை கொடுக்க சாமுண்டீஸ்வரி கண்டிப்பா இந்த கும்பிஷேகத்திற்கு வர மாட்டேன் என்கிறாள்.
அடுத்த பிளான்: காளியம்மா டீம், சாமுண்டீஸ்வரிக்கு இந்த கும்பாபிஷேம் நடப்பதில் விருப்பம் இல்லை. இதனால், கும்பாபிஷேகத்தை நிறுத்தி பழியை சாமுண்டீஸ்வரி மீது போட திட்டம் போடுகிறாள். தொடர்ந்து ஊரில் பந்தக்கால் நடுவதால் யாரும் வெளியூருக்கு போக கூடாது, மாமிசம் சாப்பிட கூடாது என்று அறிவிக்கின்றனர். பரமேஸ்வரி பாட்டி, சாமுண்டீஸ்வரி வர மாட்டேன் என்று சொன்னதால் வருத்தப்பட கார்த்திக் அத்தையை கூட்டிட்டு வர வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











