கார்த்தி போடும் திட்டம்.. சிக்குவாளா சந்திரகலா? - கார்த்திகை தீபம் !
சென்னை: உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரேவதிக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிந்து உயிர் பிழைக்கிறாள். இதைத்தொடர்ந்து கார்த்தி, தனது மனதில் இத்தனை நாட்களாக பூட்டி வைத்திருந்த காதலை ரேவதியிடம் சொல்லி கண் கலங்குகிறான். அப்போது கண் விழிக்கும் ரேவதி, நான் சவாலில் ஜெயித்து விட்டேன். என் காதலின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. நான் நிச்சயம் ஜெயிப்பேன் என்று எனக்கு தெரியும் என, ரேவதி சொல்கிறாள். அதன் பின், மருத்துவமனையில் இருந்து டிசார்ஜாகி ரேவதி வீட்டுக்கு வர, சாமுண்டீஸ்வரி ஆரத்தி எடுத்து அவளை வீட்டுக்குள் அழைக்கிறாள்.

இன்றைய எபிசோடில், ரேவதியின் நல்லபடியாக உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்தால், கோவில் கட்டுவதற்கு நிலத்தை எழுதி தருவதாக பரமேஸ்வரி பாட்டி வேண்டிக்கொண்டு இருக்கிறாள். அந்த கோவில் நிலம், ராஜசேதுபதி இடம் என்பதால், அதில் ராஜராஜனும் சாமுண்டீஸ்வரியும் கையெழுத்துப் போட வேண்டும், என பரமேஸ்வரி பாட்டி கார்த்திக்கிடம் சொல்கிறாள். ஆனால், நிச்சயம் இதற்கு சாமுண்டீஸ்வரி சம்மதிக்க மாட்டாள் அது தான் கவலையாக இருக்கு, சீக்கிரமான கோவில் கட்ட வேண்டும் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட கார்த்தி கவலைப்படாதீங்க நிச்சயமாக நாம கோவில் கட்டுவோம் அதற்கு நான் பொறுப்பு நீங்க எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க என்கிறான். வீட்டில், சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு பழத்தை கொடுத்து சாப்பிட சொல்லி அக்கறையாக பார்த்துக் கொள்ள அப்போது ராஜராஜன் கோவிலுக்கு நிலம் தர கையெழுத்து போட வேண்டும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி உங்க அம்மாவுக்காக நான் எதுக்கு கையெழுத்து போடணும் அவங்க என் அம்மாவை கொன்னவங்க.. உங்களுக்கு தெரியாதா என்று கோபப்படுகிறாள்.
கார்த்திக்கின் பிளான்: மறுபக்கம், கோவில் கட்டுவதற்கு நிச்சயம் சந்திரகலா பிரச்சனை செய்வாள் அவளை சும்மா விடக்கூடாது, அவள் என்ன திட்டம் போடுகிறாள் என்பதை தெரிந்த கொள்ள வேண்டும் என கார்த்திக் பிளான் போடுகிறான். இந்த நேரம் சாமுண்டீஸ்வரி சூலையிலில் வேலை செய்பவர்களுக்காக கார்த்தியிடம் பணத்தை கொடுக்க சொல்கிறாள். ஆனால், கார்த்திக், எனக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லி, அந்த பணத்தை சந்திர கலாவிடம் கொடுத்து அனுப்புகிறான். அந்த பணத்துடனே சந்திரகலாவிற்கு தெரியாமல், தெரியாமல் ஒரு போனையும் ஆன் செய்து அனுப்பி வைத்து சந்திரகலா என்ன பேசுகிறாள் என்பதை தெரிந்து கொள்ள திட்டமிடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











