பிணத்தை வைத்து அரசியல் மட்டுமில்ல.. கார்த்திகைதீபம் சீரியலிலும் பிணத்தை வைத்து நடக்கும் பித்தலாட்டம்

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், ராஜராஜன், சாமுண்டீஸ்வரியிடம், அம்மா, ரேவதி குண்டு அடி பட்டு இருந்த நேரத்தில், ரேவதி குணமாகி வந்தால், கோவிலுக்கு நிலத்தை எழுதி வைப்பதாக வேண்டி இருக்கிறார்கள். அந்த நிலம் என் பெயரில் இருப்பதால், நம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதில் கையெழுத்துப்போட வேண்டும் என சொல்கிறான். இதைக்கேட்ட சாமுண்டீஸ்வரி நான், அந்த கிழவி கூட வந்த கையெழுத்துப்போடவே மாட்டேன் என்று சொல்கிறாள். இவை அனைத்தையும் சந்திரகலா மறைந்து கேட்பதை கார்த்திக் பார்த்துவிடுகிறான்.

கோவில் கட்டுவதற்கு நிச்சயம் சந்திரகலா பிரச்சனை செய்வாள் அவளை சும்மா விடக்கூடாது, அவள் என்ன திட்டம் போடுகிறாள் என்பதை தெரிந்த கொள்ள வேண்டும் என நினைக்கும் கார்த்திக் ஒரு பிளான் போடுகிறான். என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருக்கும் போது, இந்த நேரம் சாமுண்டீஸ்வரி சூலையிலில் வேலை செய்பவர்களுக்காக இன்றைக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், நீங்கள் போய் கொடுத்துவிடுங்க மாப்பிள்ளை என பணத்தை கொடுக்கிறாள். இதைவைத்து ஒரு திட்டம் போடும் கார்த்தக், எனக்கு வேறு முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி, அந்த பணத்தை சந்திரகலாவிடம் கொடுத்து அனுப்புகிறான். அந்த பணத்துடனே சந்திரகலாவிற்கு தெரியாமல், தெரியாமல் ஒரு போனையும் ஆன் செய்து, சந்திரகலா யாரை சந்திக்கிறாள், என்ன பேசுகிறாள் என்பதை தெரிந்து கொள்ள திட்டமிடுகிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:
கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில் சந்திரகலா, அந்த பணப் பையுடன், சிவனாண்டி மற்றும் முத்துப்பாண்டியை சந்திக்கிறாள். பரமேஸ்வரி பாட்டி, ரேவதி குணமாகி நல்லபடியாக வந்தால், கோவில் கட்டுவதாக நிலத்தை கொடுப்பதாக வேண்டி இருக்கிறாள், அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதை மட்டும் நாம நடக்கவிடக்கூடாது என்கிறார். இதைக்கேட்ட முத்துப்பாண்டி, மருமகளே என்னிடம் நல்ல ஐடியா இருக்கு அதைமட்டும் செய்தால், நலத்தில் கோவில் கட்ட முடியாது. ஒரு அனாதை பொணத்தை கொண்டு வந்து அந்த இடத்தில் புதைத்துவைத்துவிட்டு, போலீசுக்கு தகவல் கொடுப்போம். அவர்கள் வந்த அந்த இடத்தை தோண்டுவார்கள். அதன் பின் பொணம் இருந்த இடத்தில் கோவில் கட்டுனா, கோவில் புனிதம் கேட்டுவிடும். பின் ஊருக்கு ஆபத்து வரும் என்று நாமே ஒரு புரளியை கிளப்பிவிடுவோம். அதன்பிறகு மக்களே அந்த இடத்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள், எப்படி என் ஐடியா என்கிறான். உடனே சந்திரகலா ஐடியா நல்லாத்தான் இருக்கு, நீங்க சொன்னதுபடி மட்டும் நடந்து விட்டால், ஊர் மக்கள் அந்த கிழவி நிலத்தை வேண்டாம் என்று தான் சொல்வார்கள்.

மாஸ்டர் பிளான்: பிளான் நல்லாத்தான் இருக்கு நீங்க இன்னைக்கு நைட்டே ஒரு பிணத்தை கொண்டு வந்து புதைத்துவிடுங்கள் என்கிறாள். முத்துப்பாண்டி, நீ கவலையவிடுமா, எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். இந்த முறை நாமத்தான் ஜெயிக்கப்போகிறோம் என்கிறார். உடனே சிவனாண்டி, சூப்பர் சித்தப்பா, நல்ல ஐடியா, அந்த கார்த்தியை தோற்கடிக்க அருமையான திட்டம், இந்த திட்டத்தை நாம மிஸ் பண்ணிடவேக்கூடாது என்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.‌

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X