நிலத்தில் தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷம்.. சிவனாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலா, பரமேஸ்வரி கோவிலுக்கு நிலம் தர இருக்கும் விஷயத்தை சிவனாண்டி மற்றும் முத்துப்பாண்டியிடம் சொல்லியதும் முத்துப்பாண்டி அந்த இடத்தில் பிணத்தை வைத்துவிட்டால் இந்த இடத்தில் கோவில் கட்டக்கூடாது என்று சொல்லிவிடலாம் என்ற திட்டத்தை சொல்கிறான். இதைக்கேட்ட சந்திரகலா, ஐடியா நல்லாத்தான் இருக்கு, நீங்க சொன்னதுபடி மட்டும் நடந்து விட்டால், ஊர் மக்கள் அந்த நிலத்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்.
பிளான் நல்லாத்தான் இருக்கு நீங்க இன்னைக்கு நைட்டே ஒரு பிணத்தை கொண்டு வந்து புதைத்துவிடுங்கள் என்கிறாள். முத்துப்பாண்டி, நீ கவலையவிடுமா, எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். இந்த முறை நாமத்தான் ஜெயிக்கப்போகிறோம் என்கிறான். இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த கார்த்திக் இந்த திட்டத்தை எப்படி முறியடிப்பது என யோசித்துக்கொண்டு இருக்கிறான். மறுபக்கம், சிவனாண்டி மற்றும் முத்துப்பாண்டி இருவரும் சேர்ந்த அந்த இடத்தில் பிணத்தை புதைத்து வைக்கின்றனர்.

கார்த்திகை தீபம்: பின் போலீசுக்கு, பரமேஸ்வரி பாட்டி நிலத்தில் ஒரு பிணம் இருக்கு என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறான் முத்துப்பாண்டி. இதைத்தொடர்ந்து, அந்த இடத்தை போலீஸ் தோண்டுவதற்கான வருகின்றனர். அந்த நிலத்தை தோண்ட தோண்ட கடைசியில் சாமி சிலை கிடைக்க அனைவரும் ஆச்சர்யம் அடைகின்றனர். ஆனால், சிவனாண்டி அண்ட் கோ அதிர்ச்சி அடைகின்றனர். கார்த்திக் இங்க பாருங்க நிலத்தில் இருந்து சாமி சிலை தான் கிடைத்து இருக்கு, என்றால், இந்த இடத்தில் தான் கோவில் கட்ட வேண்டும் என்று சாமியே நினைக்கிறது. இதைவிட நல்ல இடம் கோவில் கட்டுவதற்கு கிடைக்காது என்று சொல்ல, ஊர் மக்களும் அதை ஏற்று கொள்கின்றனர்.
கிடைத்த சாமி சிலை: பிணம் எப்படி சாமி சிலையாக மாறியது என்று சிவனாண்டி அண்ட் கோ நினைத்துக்கொண்டு இருக்க, அப்போது, கார்த்திக், நீங்க இந்த இடத்தின் புனிதத்தை கெடுப்பதற்காக பிணத்தை புதைத்த விஷயத்தை சந்திரகலா என்னிடம் சொல்லிவிட்டால் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, முத்துப்பாண்டி என் மருமகள் நிச்சயம் அப்படி சொல்லி இருக்க மாட்டாள் என்று சொல்ல, பரவாயில்லையே மருமகள் மீது இவ்வளவு நம்பிக்கை இருக்கு, அவங்க சொல்லவில்லை. நான் தான் கேட்டேன் என்று சொல்ல இருவரும் குழப்பம் அடைகின்றனர். அதன்பின், சிவனாண்டி, சந்திரகலாவிற்கு போன் செய்து, விஷயத்தை சொல்ல, அவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என யோசிக்கிறாள்.
மறுபக்கம், அந்த இடத்தை எழுதி கொடுக்க ராஜராஜன் மற்றும் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட வேண்டும் என்று தெரிந்து கொண்ட ஊர் மக்கள், ஒன்று சேர்ந்து சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வருகின்றனர். பரமேஸ்வரி கட்ட இருக்கும் கோவில் நிலம் நீங்க கையெழுத்து போட்டால் தான் கிடைக்கும், எங்களுக்காக எவ்வளவோ நல்லது செய்துவிட்டீர்கள், ஊர் மக்களுக்காக, நீங்க அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தால் நன்றாக இருக்கும் என சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக்கை பழி தீர்க்க அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











