மருமகனு கூட பாக்காமல் சாமுண்டீஸ்வரி செய்த வேலை.. கொந்தளித்த துர்கா.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு இளையராஜா ராஜராஜனின் பேரன் இல்லை என்ற உண்மை தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்று பார்க்கலாம். அதாவது, சாமுண்டீஸ்வரி நம்மை சுற்றி என்ன நடக்கிறது? எது உண்மை? என்று தெரியாமல் அப்செட்டில் இருக்கிறாள். இன்னொரு பக்கம் ரேவதி மற்றும் பரமேஸ்வரி பாட்டி ஆகியோர் கோவிலுக்கு வருகின்றனர்.
அங்கு சாமியாருக்கு சாமி வந்து, நான் இந்த ஊரையும் மக்களையும் நல்லபடியாக பார்த்துக்கொள்கிறேன். ஆனால், நீங்க எனக்கு குறைவைத்துவிட்டீர்கள், எதுக்கு கும்பாபிஷேகம் நடத்தல? என்று கேட்க, அப்போது பரமேஸ்வரி பாட்டி, என் மகள் அபிராமி இறந்துவிட்டதால் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் போய்விட்டது என்றால், அவள் விதி முடிந்துவிட்டது அவள் போய்ட்டா, அதுக்காக எனக்கு கும்பாபிஷேகம் செய்ய மாட்டீயா.. ஊர் மக்கள் நல்லா இருக்கனும்னா இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கும்பாபிஷேகம் நடக்கணும். அப்போது தான் அம்மனின் மனம் குளிரும், அப்படி நடக்கவில்லை என்றால், நான் இந்த ஊரைவிட்டு போய்விடுவேன் என்று சொல்கிறார். ஊர் மக்களும் இதை கேட்டு விட கூடிய விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.

கார்த்திகை தீபம்: இதைத்தொடர்ந்து பேசிய கார்த்திக், நான் ராஜ சேதுபதியின் பேரன் என்ற விஷயம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்து விட்டால். நிச்சயமாக இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்த விட மாட்டார்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் இந்த விஷயத்தில் நாம ஜெயிக்க முடியும், கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கும் எனக்காக என் கூட ஒத்துமையா இருப்பீங்களா என்று கேட்க, ஊர் மக்கள் அனைவரும் நிச்சயம் இருப்போம்.எங்களுக்கான ஆடம்பரமான வாழ்கையை விட்டுவிட்டு நீங்க வந்து இருக்கும் போது உங்களுக்காக நாங்க நிச்சயம் உங்க கூட இருப்போம் என்கின்றனர்
சிவனாண்டி செய்த வேலை: மறுபக்கம், நவீன், துர்கா ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, அந்த ஓட்டலுக்கு சிவனாண்டியும் முத்துவேலும் சாப்பிட வருகின்றனர். இவர்கள் இருவரையும் பார்த்து கடுப்பான சிவனாண்டி, சில பேர் எப்படித்தான் மானம் கேட்டுப்போய் இருக்காங்கனு தெரிய, இப்படி மானம் கெட்டவங்க சாப்பிடும் ஓட்டலில் நாம சாப்பிட வேண்டுமா என நவீன் காதில் விழும்படி சொல்கிறான். இதைக்கேட்டு ஆத்திரப்படும் நவீன், சிவனாண்டியின் சட்டையைப்பிடித்து அடிக்க அந்த இடத்தில் பெரிய சண்டையே நடக்கிறது.
யாருடா அத்தை: அதே ஹோட்டலுக்கு சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் வருகின்றனர். இங்கு நடக்கும் சண்டையை பார்த்துவிட்டு உங்களுக்கு அறிவே இல்லையா? இப்படித்தான் அசிங்கமா ரோட்டில் சண்டை போடுவீர்களா? என கேட்க அப்போது நவீன், அத்தை இவன்தான் தவறாக பேசினான் என சொல்கிறான். அத்தை என நவீன் சொன்னதால் கடுப்பான சாமுண்டீஸ்வரி, யாருடா உனக்கு அத்தை, என்கிட்ட யாரும் உறவு கொண்டாட தேவையில்லை என சொல்கிறாள். சாமுண்டீஸ்வரி அப்படி சொன்ன போதும், நவீன் மீண்டும் அத்தை என அழைத்து. இவன் தவறாக பேசினான் என்று சொல்வதற்கும். மறுபடியும் என்னை அத்தை என்று கூப்பிட்டால் அவ்வளவுதான் என அடிப்பதற்காக கையை ஓங்க அந்த நேரம் பார்த்து துர்கா கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











