சாமுண்டீஸ்வரி வீட்டை ஆட்டைய போட நடக்கும் திட்டம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலா, காளியம்மா, சிவணான்டி என அனைவரும் சேர்ந்து சாமுண்டீஸ்வரியை அழிக்க பெரிய திட்டம் ஒன்றை போடுகின்றனர். சாமுண்டீஸ்வரிக்கு வீடு இருப்பதால் தான், ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கா, அந்த வீட்டையே இல்லாமல் ஆக்கி, அவளை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தி அவளின் கொழுப்பை அடக்க வேண்டும் என்று காளியம்மாள் தனது திட்டத்தை சொல்ல, சந்திரகலா அதைக்கேட்டு சந்தோஷப்படுகிறாள்.
கார்த்திகை தீபம் இன்றைய நிகழ்ச்சியில், துர்காவின் சாந்தி முகூர்த்தத்திற்கு கட்டிலை ரேவதி அலங்கரித்துக் கொண்டே இருக்கிறாள். அப்போது கார்த்தி, அந்த வழியாக வர,ரேவதி, கார்த்திகை பாசத்தோடு அழைத்து, நமக்கு இப்போ இப்படி முதலிரவு நடக்கும் என கேட்கிறாள். உடனே கார்த்தி, நம்ம பாட்டி வீட்டில் இருக்கோம், எதையாவதை பேசிக்கொண்டு இருக்காதே என்கிறார். உடனே பாட்டி வீடும் நம்ம வீடு தானோ, எங்கே நடந்தா என்ன, நான் ஆசையா எப்போ முதல் இரவுனு கேட்கிறேன், நீ இப்படி எல்லாம் பேசாதேனு சொன்ன என்ன அர்த்தம் புருஷா, என்னை காதலிக்கிறேனு ஒரு வார்த்தை சொல்லு போதும், என ரேவதி, கார்த்திக்கிடம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொண்டு இருக்கிறாள்.

கார்த்திகை தீபம்: அப்போது ரோகிணி வாந்தி எடுத்துக்கொண்டு இருக்க, ரேவதி இந்த பேச்சை நிறுத்திவிட்டு, ரோகிணி வாந்தி எடுக்குற அதைப்போய் பாரு என்கிறான் கார்த்திக். அக்காவை பார்த்துக்கொள்ள மாமா இருக்காரு, அவர் அக்காவை தாங்கு தாங்குனு தாங்குவார். என்னை பார்த்துக்கொள்ளத்தான் ஆள் இல்லை என்று புலம்பிக்கொண்டே வெளியில் போகிறாள். அதற்குள் ரோகிணி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு ஓடிவரும் பாட்டி, அவளின் கையை பிடித்துப்பார்த்துவிட்டு அவள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டு சந்தோஷப்படுகிறாள். இந்த விஷயத்தை பரமேஸ்வரி பாட்டி, மயில்வாகனத்திடம் சொல்ல, அவன் அப்பாடியா... ரொம்ப சந்தோஷம் என இயல்பாக சொல்கிறான்.
நலங்கு வைக்கும் விழா: இதைப்பார்த்த பரமேஸ்வரி பாட்டி, நான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கேன். நீ சந்தோஷமே இல்லாமல் இருக்க என்று கேட்க, பாட்டி எனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும். எனக்கு மட்டுமில்ல கார்த்திக், ரேவதி அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும். ஆனால், சாமுண்டீஸ்வரி அத்தை, இந்த குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று சொன்னதால், நாங்க யாரும் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறோனம் என்கிறான். இதைக்கேட்ட பரமேஸ்வரி பாட்டி, அவ கிடக்குற, பேத்திக்கு நான் நலங்கு வைப்பேன் என, பாட்டி நலங்கு வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறாள். அப்போது, ரோகிணி, அம்மாவை நினைத்து வருத்தப்பட, கார்த்திக் ரோகிணியிடம், நீங்க கவலைப்படாதீங்க, நீங்க ஆசைப்படுற மாதிரி அத்தையே வந்து உங்களுக்கு துளசி தண்ணீர் தருவாங்க என்று உறுதி அளிக்கிறான்.
காளியம்மாவின் பிளான்: மறுபக்கம், காளியம்மாள் திட்டத்தின் படி, சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு இருவர் வருகின்றனர். அவர்கள் பெண்களுக்காக நடத்தப்படும் ட்ரெஸ்ட்டில் இருந்து வந்திருப்பதாக சொல்லி உதவி கேட்கின்றனர். உடனே சாமுண்டீஸ்வரி, நான் நிச்சயமா உங்களுக்கு உதவி செய்கிறேன். என் நிலத்தில் கொஞ்சம் நிலத்தை உங்களுக்கு தருவதாக வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு சந்திரகலா, காளியம்மா ஆகியோர் மேஜிக் பேனாவை வைத்து நிலத்தை எழுதி வாங்கிய பிறகு அதை மாற்றி எழுதி விட்டு அவளை வெளியில் துரத்திவிடலாம் என்று திட்டம் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











