முதலிரவு அறைக்கு பால் சொம்புடன் வந்த ரேவதி.. காயப்படுத்திய கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு உதவி கேட்டு வருபவர்கள் பெண்களுக்காக நடத்தப்படும் ட்ரெஸ்ட்டில் இருந்து வந்திருப்பதாக சொல்லி உதவி கேட்கின்றனர். உடனே சாமுண்டீஸ்வரி, நான் நிச்சயமா உங்களுக்கு உதவி செய்கிறேன். என் நிலத்தில் கொஞ்சம் நிலத்தை உங்களுக்கு தருவதாக வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு சந்திரகலா, காளியம்மா ஆகியோர் மேஜிக் பேனாவை வைத்து நிலத்தை எழுதி வாங்கிய பிறகு அதை மாற்றி எழுதி விட்டு அவளை வெளியில் துரத்திவிடலாம் என்று திட்டம் போடுகின்றனர்.
இதையடுத்து, கார்த்திக், ரேவதி வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அந்த கும்பல் வீட்டிற்கு வருகிறது. அந்த மேஜிக் பேனாவால் எழுதியதை பார்த்துவிட்டு சாமுண்டீஸ்வரி கையெழுத்து போடுகிறாள். கையெழுத்து வாங்கி இவர்கள் வெளியே கிளம்ப நேரத்தில் கார்த்திக் வீட்டுக்குள் நுழைய என்ன விஷயம் என்று விசாரிக்கிறான். அவர்களிடம் என்ன விஷயம் என்று விசாரித்துக்கொண்டு இருக்க,அப்போது சாமுண்டீஸ்வரி பெண்களுக்காக ட்ரெஸட் வைத்து இருக்கிறார்கள், அதற்காகத்தான் நம்மிடம் இருக்கும் நிலத்தை கையெழுத்து போட்டு கொடுத்தேன் என சொல்கிறாள். உடனே கார்த்திக் எல்லாத்தையும் முழுசா படிச்சுதானே கையெழுத்து போட்டீங்க என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரியும் ஆமாம் மாப்பிள்ளை நல்லா படித்துப்பார்த்துத்தான் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறாள்.

கார்த்திகை தீபம்: அடுத்த நாள் காலையில் சிவனாண்டி வீட்டுக்கு வந்து சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதிக் கொடுத்துட்டா, இனிமேல் இது என் வீடு, எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்ல ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து ஊர் மக்கள் இதை நம்ப மறுக்கின்றனர். உடனே ச சிவனாண்டி அந்த பத்திரத்தை காட்டுகிறான். அதைப்படித்து பார்த்து அதிர்ச்சி அடையும் சாமுண்டீஸ்வரி, இது என் கையெழுத்து நான்தான்,ஆனால்,நான் இந்த வீட்டை எழுதி கொடுக்கவில்லை என சொல்கிறாள். அப்போது, சாமுண்டீஸ்வரி என்னை ஏமாற்றி இந்த நிலத்தை நீ எழுதி வாங்கி இருக்க, உதவி கேட்பது போல வீட்டுக்குள் ஆளை அனுப்பி கடைசியில் என் வீட்டையே எழுதி வாங்குறியா, உன்னை சும்மா விடமாட்டேன் எ என்று போலீஸ் ஸ்டேசனுக்கு கிளம்ப முடிவெடுக்கிறாள். அப்போது, கார்த்திக், அத்தை போலீஸ்க்கு எல்லாம் போக வேண்டாம், அப்புறம் கோர்ட்டுக்கு போக வேண்டியது இருக்கும் வீட்டுக்கு சீல் வைப்பாங்க, 24 மணி நேரத்தில் உண்மை என்ன என்பதை நானே கண்டுபிடித்து நிரூபிக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.
பால் சொம்புடன் வந்த ரேவதி: அடுத்ததாக,கார்த்திக் ரூமுக்கு வர ரேவதி முதலிரவு செட்டப்பில் ஏற்பாடு செய்து வைத்திருக்க அதைப் பார்த்து கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். அப்போது ரேவதி, அலங்கரம் எப்படி இருக்கு புருஷா என்று கேட்கிறாள். உடனே கார்த்திக், என்ன ரேவதி இதெல்லாம், என் மனச நீ புரிஞ்சிக்கவே மாட்டியா, என்னால இன்னும் தீபாவை மறக்கமுடியல என்கிறான். அப்போது, ரேவதி, தெரியும் ராஜா, இருந்தாலும், என் ஆசைக்காக இப்படி செய்துவிட்டேன் என்று சொல்லி வருத்தப்படுகிறாள். இருந்தாலும், நான் நிச்சயம் உங்களை ஐ லவ் யூ னு சொல்ல வைப்பேன் என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











