சாமுண்டேஸ்வரியின் வீடு கைவிட்டு போகுமா? நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திக் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் பத்திர பேப்பர்களை வாங்கும் கடைக்கு சென்று இவர்கள் குறித்து விசாரிக்க பிறகு சிசிடிவி காட்சிகளை வைத்து யார் என்பதை கண்டுபிடிக்கின்றனர். அதன் பிறகு சந்திரகலாவை சந்தித்து விசாரிக்க அவள் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறாள். உடனே வீடியோ ஆதாரத்தை காட்ட அதிர்ச்சி அடையும் சந்திரகலா, எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது, காளியம்மாவிற்கு தான் தெரியும் என்று சொல்கிறாள். இதைத்தொடர்ந்து,சந்திரகலா காளியம்மாவுக்கு ஃபோன் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்க, மருமகளாக இருந்தாலும், அவர்கள் இருக்கும் இடத்தை சொல்லமாட்டேன் என்று சொல்லிவிடுகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

இதையடுத்து, சாமுண்டீஸ்வரியிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கிய நபர்கள் காளியம்மா வீட்டில் தான் மறைந்து இருப்பார்கள் என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வருகிறது. இதனால் காளியம்மாவை மடக்கி பிடிக்க கார்த்திக் திட்டம் ஒன்றை போடுகிறான். இதற்காக மயில்வாகனத்தை சாமியராக மாற்றுகிறான். சாமுண்டீஸ்வரியின் நான்கு பெண்களும் அவனுக்கு உதவி செய்யும் பெண்களாக மாறி. காளியம்மா வீட்டிற்குள் நுழைந்து அவளை நம்ப வைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும், எல்லா ரூமிலும் சென்று பூஜை செய்து தீர்த்தத்தை தெளிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் எல்லா ரூமையும் திறந்து காட்டும் காளியம்மா ஒரு ரூமை மட்டும் திறக்காமல் அந்த ரூமில் பூஜை செய்ய வேண்டாம் என்று சொல்கிறாள். அந்த ரூமில் தான் சம்மந்தப்பட்ட நபர்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வர மயில்வாகனம் கார்த்திக்கு தகவல் கொடுக்கிறான்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி லாயரை வர வைத்து சிவனாண்டி சொத்தை எழுதி வாங்கிய விஷயத்தை சொல்கிறாள். ஆனால் லாயர் நீங்க எப்படி இப்படி ஏமாந்தீங்க? ஆச்சரியமா இருக்கு என்று சொல்கிறார். மேலும் சிவனாண்டி பயங்கரமாக பிளான் போட்டு உங்க கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கான், சட்ட ரீதியா இதுல எதுவும் பண்ண முடியாது என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X