டேய்.. நீ எல்லாம் சாமியாரா? கார்த்திக்கு பல்ப் கொடுத்த காளியம்மா.. கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரியிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கிய நபர்கள் காளியம்மா வீட்டில் தான் மறைந்து இருப்பார்கள் என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வருகிறது. இதனால் காளியம்மாவை மடக்கி பிடிக்க கார்த்திக் திட்டம் ஒன்றை போடுகிறான். இதற்காக மயில்வாகனத்தை சாமியராக மாற்றுகிறான். சாமுண்டீஸ்வரியின் நான்கு பெண்களும் அவனுக்கு உதவி செய்யும் பெண்களாக மாறி. அதாவது, சாமியார் வேஷத்தில் இருக்கும் மயில்வாகனம், தகரம், இரும்பு என எதை கொடுத்தாலும் அதை தங்கமாக மாற்றிவிடுகிறார் என்று காளியம்மாள் கேள்விப்படுகிறாள்.

இதைக்கேட்டு காளியம்மாள், சாமியார் வேஷத்தில் இருக்கும் சாமியார் மற்றும் நான்கு பேரையும் வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என அழைத்து வருகிறாள். வீட்டிற்கு வரும் மயில்வாகனத்தை பார்த்த சிவனாண்டி, இவரை எங்கோ பார்த்தது போல இருக்கே என்று சொல்கிறாள். உடனே, சாமியார் என்னை எங்கேயும் பார்த்து இருக்க முடியாது. நான் இப்போது தான் இமயமலையில் இருந்து நேராக இங்கே வருகிறேன் என சொல்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதையடுத்து, பூஜையை தொடங்கும் மயில்வாகனம், எல்லா ரூமிலும் சென்று பூஜை செய்து தீர்த்தத்தை தெளிக்க வேண்டும் என்று சொல்கிறான். அதன்படி,அனைத்து ரூமுக்கு சென்று, பூஜை செய்த நீரை தெளிக்கிறான். எல்லா ரூமையும் திறந்து காட்டும் காளியம்மா ஒரு ரூமை மட்டும் திறக்காமல் அந்த ரூமில் பூஜை செய்ய வேண்டாம் என்று சொல்கிறாள். அந்த ரூமில் தான் சம்மந்தப்பட்ட நபர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பார்கள் என்பது தெரிய வர மயில்வாகனம், இந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்கிறான். அப்போது, கார்த்திக், இரவானதும் போலி கையெழுத்து வாங்கிய இருவரை பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைத்துவிடலாம் என திட்டம் போடுகின்றனர்.

ஏமாந்த மயில்வாகனம்: மயில்வாகனம், கார்த்திக் இருவரும், காளியம்மாள் வீட்டில் பூட்டி இருந்த அறையின் கதவை திறந்து பார்க்கின்றனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து இருவரும் நிற்க அப்போது, அங்கு வரும் காளியம்மாள், கைதட்டி... நல்ல நடிப்பு, மயில்வாகனம் நீ தான் போலி சாமியார் வேஷத்தில் வந்திருக்க என்று எனக்கு நல்லவே தெரியும், இருந்தாலும் நீ என்னத்த செய்யப்போற என்பதை பார்க்கத்தான் காத்துக்கிட்டு இருந்தேன், ஒட்டு தாடி, மீசை வெச்சிக்கிட்டு வந்த நீ சாமியாரா ஆய்டுவியா என்று ஏளனமாக பேசுகிறாள். இதனால், இவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.

மறுபக்கம், பூட்டப்பட்டு இருக்கும் கோவில் அருகே இருவருக்கு யாரோ சாப்பாடு கொண்டு போவதை கவனிக்கிறார் பரமேஸ்வரி பாட்டி. மேலும் சம்மந்தப்பட்ட அந்த நபர்கள் இங்கு தான் பதுங்கி இருக்கிறார்கள் என்று சந்தேகப்படும் பாட்டி, இந்த விஷயத்தை கார்த்திக்கு சொல்கிறாள். கார்த்திக் அந்த இடத்திற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X