மனதில் இருக்கும் காதலை சொன்ன கார்த்திக்.. கண்கலங்கிய ரேவதி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக் கோவிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் நபர்களை பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைத்து காளியம்மா, சிவனாண்டி திட்டத்தை முறியடிக்கின்றனர். பின் ஊர் காரர்கள் சிவனாண்டி மீது கம்பளைண்ட் கொடுக்க சொல்ல சாமுண்டீஸ்வரி இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி கிளம்பி செல்கிறாள். பின் வீட்டிற்கு வந்த சிவனாண்டி, காளியம்மா ஆகியோர் நல்ல வாய்ப்பு, இப்படி நாசமாக போய்டுச்சு என்று வருத்தப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் கார்த்தியை, சந்திரகலா நிற்க வைத்து உனக்கும் பாட்டிக்கும் என்ன சம்மந்தம், எல்லா முறையும் அவங்க எப்படி உதவுறாங்க என்று கேள்வி கேட்கிறாள், பாட்டி இந்த குடும்பத்துக்கு நல்லது தான் நினைக்குறாங்க என்று சப்போர்ட் செய்து பேசுகிறான். இதனால் சாமுண்டீஸ்வரிக்கும் கார்த்திக் மீது சந்தேகம் உருவாக ஓரு டிடெக்டிவ்வை ஏற்பாடு செய்து கார்த்தியை நோட்டமிட சொல்கிறாள்.

காதலை சொன்ன கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பார்த்து ரசித்தபடி இருக்கிறாள். போட்டோவை பார்த்து ரேவதி கொஞ்சியதை பார்த்த கார்த்திக் ரேவதியிடம் சத்தம் போடுகிறான். எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறான். இதை பார்த்துவிட்ட மயில்வாகனம் கார்த்தியிடம் எதுக்கு இப்படி கோபப்படுற என்று கேட்க கார்த்திக் ரேவதி செய்ததெல்லாம் பார்த்து என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்கிறான். சரிப்பா அந்த பொண்ணை சமாதானப்படுத்தலாம் என்று ரூமுக்கு அழைத்துச் செல்ல அங்கு ரேவதி இல்லை என்பது தெரிய வருகிறது.
தப்பி ஓடிய மாயா: ரேவதி பரமேஸ்வரி பாட்டி ரூமுக்கு வந்து படுத்து விட நிலையில் கார்த்திக் அங்கு வந்து அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறான். பிறகு ரேவதி தூங்கும் போது கார்த்திக் அவரது பக்கத்தில் உட்கார்ந்து எனக்கும் உன்னை பிடிக்கும்.. ஆனால், என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கு என்று மனதுக்குள் இருக்கும் விஷயத்தை முதல் முறையாக வெளிப்படுத்துகிறான். அதே நேரம் காவல்நிலையத்தில் இருந்த மாயா, போலீசுக்கு டிமிக்கு கொடுத்துவிட்டு தப்பிட்டு விடுகிறாள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கார்த்திக், மாயாவால் ரேவதி உயிருக்கு ஆபத்து வருமே என பயப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











