கர்ப்பிணியாக்கி ஏமாத்திட்டான்.. ரோகிணிக்கு தெரிய வந்த உண்மை.. திருமணம் நடக்குமா.. கார்த்திகை தீபம்!

சென்னை: பரமேஸ்வரி பாட்டியிடம் உண்மையை சொன்ன, கான்ஸ்டபிள் சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்க, பரமேஸ்வரி பாட்டி, உண்மை இப்படி தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் இருக்கிறார். மறுபக்கம், கார்த்திக் நவீனை சரியான நேரத்திற்கு திருமண கொண்டு வரவேண்டும் என்பதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறான். துர்காவிற்கு இந்த கல்யாணம் நல்லபடியாக நவீனுடன் நடக்க வேண்டும் என்ற கவலையில் இருக்கிறாள்.

இதையடுத்து கார்த்திகை தீபம் வெள்ளிக்கிழமை எபிசோடில், துர்காவின் கல்யாணம் ஏற்பாடுகள் ஒருபுறம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது, கர்ப்பிணி பெண் ஒருத்தி மாப்பிள்ளையை தனியாக சந்தித்து பேசுகிறாள். அதுவும் கண் கலங்கியபடி பேசுவதை தூரத்தில் இருந்து ரோகிணி கவனித்து விடுகிறாள். இந்த பெண் ஏன், மாப்பிள்ளையிடம் பேசுகிறாள், அதுவும் அழுதுக்கொண்டே, அழுக்கொண்டு பேசுவதற்கு என்ன காரணம் என ரோகிணிக்கு சந்தேகம் வருகிறது. பின் அந்த கர்ப்பிணி பெண், அழுதுக்கொண்டே, மண்டபத்தில் இருந்து வெளியே செல்கிறாள். அந்த பெண்னை பின் தொடர்ந்து செல்லும் ரோகிணி, அவளை தடுத்து நிறுத்தி மாப்பிள்ளையை தனியாக சந்தித்து என்ன பேசுனீங்க, நீங்க யார் என்று கேட்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: உடனே அந்த கர்ப்பிணி பெண், அவன் ரொம்ப மோசமான ஆள், அவன் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, என்னை கர்ப்பம் ஆக்கி விட்டு கடைசியில் வேறு ஒரு பெண்ணை பணத்துக்காக திருமணம் செய்து கொள்ள பார்க்கிறான். அவனிடம் எத்தனையோ முறை கெஞ்சி விட்டேன். ஆனால், அவன் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான். நீங்கள் பார்ப்பதற்கு பெரிய குடும்பமாக தெரிகிறீர்கள், அப்படி இருக்கும்போது மாப்பிள்ளை யார், எப்படிபட்டவன் என்று விசாரித்து பெண்ணை கொடுக்க மாட்டீர்களா என சொல்ல கதறி அழுகிறாள். இதைக்கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறாள்.

மோசமானவன்: கர்ப்பிணி பெண்ணும், ரோகிணியும் பேசிக்கொண்டே இருப்பதை தூரத்தில் இருந்து முத்துப்பாண்டி கவனித்து விடுகிறான். ரோகிணி மட்டும் இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடம் சொன்னால் திருமணம் நின்று விடும், பின் நாம போட்ட திட்டம் அனைத்தும் வீணாகிவிடும் என நினைக்கிறான். இதனால், ரோகிணி கடத்துவதற்கு திட்டம் போடுகிறான். குழப்பத்தோடு மண்டபத்துக்கு வரும் ரோகிணி, இந்த விஷயத்தை எப்படியாவது அம்மாவிடம் சொல்லி திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என சாமுண்டீஸ்வரிக்கு பலமுறை போன் செய்கிறாள். சாமுண்டீஸ்வரி போனை எடுக்காததால், பல இடத்தில் சாமுண்டீஸ்வரியை தேடி செல்கிறாள்.

கடத்தப்பட்ட ரோகிணி: இந்த நேரம் பார்த்து, முத்துப்பாண்டி ரோகிணியின் தலையில் அடித்தது, அவளை கடத்தி ஒரு இடத்தில் கட்டிப்போட்டு விடுகிறான். மண்டபத்தில் ரோகிணி இல்லாததால், பல இடத்தில், மயில்வாகனம், ரேவதி, கார்த்திக்கு என அனைவரும் ரோகிணியை தேடுகின்றனர். ஆனால், அவள் எங்கேயும் இல்லாததால் கார்த்திக்கிற்கு சந்தேகம் வருகிறது. இது எல்லாம் சின்ன அத்தை சந்திரகலாவின் வேலையாகத்தான் இருக்கும் என முடிவு செய்கின்றனர். கடைசியில் மண்டபத்தின் ஒரு அறையில், ரோகிணி மயங்கிய நிலையில் இருக்கிறாள். அவளை மீண்டு என்ன நடந்தது என்று விசாரிக்க, அப்போது ரோகிணி மாப்பிள்ளை மிகவும் மோசமானவன் என்ற தகவலை சொல்கிறாள். இதையடுத்து அனைவரும் சேர்ந்த இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல செல்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X