ரேவதியின் உயிரை எடுக்க காத்திருக்கும் மாயா.. கடைசி நேரத்தில் காதலை சொல்வாரா? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்து செல்கின்றனர். வழியில், போலீஸ் ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தி விட்டு டீ குடித்துக்கொண்டு இருந்த போது, மாயா தப்பித்துவிடுகிறாள். இந்த விஷயத்தை போலீஸ் அதிகாரி, கார்த்திக்கிடம் சொல்கிறார். மாயா, ரேவதியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என திட்டம் போட்டு இருகிறாள். இதனால், நீங்கள்கொஞ்சம் கவனமாக இருங்கள் நாங்கள், சீக்கிரமா அவளை பிடித்து விடுகிறோம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக வீட்டில் சாமுண்டீஸ்வரி, தொடர்ந்து குடும்பத்திற்கு ஏதோ ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இதனால் நாம் அனைவரும் சேர்ந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று என் மனதிற்கு தோன்றுகிறது. நாளைக்கு அனைவரும் கோயிலுக்கு போகலாம் என முடிவு செய்கிறாள் சாமுண்டீஸ்வரி. உடனே ரோகிணி ரொம்ப நல்ல விஷயம் அம்மா, எல்லாரும் சேர்ந்து வெளியில் போய் ரொம்ப நாளாச்சு என்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மாயா வெளியே வந்திருக்கும், இந்த நேரத்தில் நாம் கோயிலுக்கு செல்வது சரியாக இருக்காது என கார்த்தி மயில்வாகனத்திடம் சொல்கிறார். அப்போது, மயில்வாகனம் கோயிலுக்கு போவதாக முடிவு எடுத்துவிட்டது. போகவில்லை என்றால், பின் அதுவே அபசகுணமாக இருக்கும். நாம ரேவதி கூடத்தானே இருக்க போகிறோம், பிரச்சனை வராதபடி படித்துக்கொள்ளலாம் என்கிறார். நீங்க சொல்வது சரிதான், மாயா கையில் துப்பாக்கி வைத்து இருக்கிறாள். அதை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருக்கு என்று சொல்கிறான் கார்த்திக். உடனே மயில்வாகனம், கடவுளின் மீது பாரத்தை போட்டு அனைவரும் கோயிலுக்கு போய்விட்டு வரலாம் என்கிறான்.

மாயாவிற்கு கிடைத்த தகவல்: கோயிலுக்கு செல்வதற்காக, ராஜராஜன் மார்க்கெட்டில் 40 முழத்திற்கு பூ வாங்குகிறான். இதை மறைந்திருந்து மாயா பார்த்துவிட்டு பூக்காரரிடம் எதற்காக இவ்வளவு பூ வாங்குகிறார்கள் என விசாரிக்கிறாள். அப்போது, அந்த கடைக்காரர் அவர்கள் கோயிலுக்கு செல்வதை சொல்கிறார். விஷயத்தை இதை தெரிந்து கொண்ட மாயா, ரேவதியை அந்த கோவிலில் வைத்த தீர்த்து கட்டிவிட வேண்டும் என திட்டம் போடுகிறாள்.

பின் தொடரும் மாயா: இதைத் தொடர்ந்து அனைவரும் கோயிலுக்கு காரில் புறப்பட்டு செல்கின்றனர். அவர்கள் அனைவரும் காரில் சென்று கொண்டிருக்க, துரத்தில் இருந்தபடி ஆட்டோவில் மாயா அவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறாள். ஒரு கட்டத்தில் கார்த்திக், தொடர்ந்து வரும் ஆட்டோவில் கவனித்து விட்டு அதில் மாயா இருக்க வாய்ப்பு இருக்கிறது என சந்தேகப்படுகிறான். இந்த விஷயத்தை கார்த்திக் மயில்வாகனத்திடம் சொல்ல, அவனும் அந்த ஆட்டோவை நோட்டமிடுகிறான். அதில், மாயா இருப்பது தெரிந்துவிட, எதற்கு மேல் நாம் தாமதிக்கக்கூடாது உடனே போலீசுக்கு தகவல் கொடுத்து விடலாம் என சொல்கிறார். இதையடுத்து, அனைவரும் கோவிலுக்குள் செல்கின்றனர். அப்போது, கார்த்திக் தன்னுடைய போலீஸ் நண்பன் சரவணனுக்கு ஃபோன் செய்து மாயா எங்களை பின் தொடர்ந்த வந்த விஷயத்தை சொல்ல, உடனடியாக அந்த இடத்தில் போலீஸ் டீம் வருகிறது. போலீஸ் டீம் கோவிலில் வாசலில் நிற்பதை பார்த்துவிட்ட மாயா, மறைத்துக்கொண்டு ரேவதியை சுட்டுத்தள்ள சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X