ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேவதி.. மடியில் போட்டு கதறி அழுத கார்த்திக்.. கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் கோயிலுக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் காரில் சென்று கொண்டிருக்க, துரத்தில் இருந்தபடி ஆட்டோவில் மாயா அவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறாள். ஒரு கட்டத்தில் கார்த்திக், தொடர்ந்து வரும் ஆட்டோவில் கவனித்து விட்டு அதில் மாயா இருக்க வாய்ப்பு இருக்கிறது என சந்தேகப்படுகிறான். இந்த விஷயத்தை கார்த்திக் மயில்வாகனத்திடம் சொல்ல, அவனும் அந்த ஆட்டோவை நோட்டமிடுகிறான். அதில், மாயா இருப்பது தெரிந்துவிட, போலீசுக்கு தகவல் கொடுக்கின்றனர்.
அப்போது, கார்த்திக் தன்னுடைய போலீஸ் நண்பன் சரவணனுக்கு ஃபோன் செய்து மாயா எங்களை பின் தொடர்ந்த வந்த விஷயத்தை சொல்ல, உடனடியாக அந்த இடத்தில் போலீஸ் டீம் வருகிறது. போலீஸ் டீம் கோவிலில் வாசலில் நிற்பதை பார்த்துவிட்ட மாயா, மறைத்துக்கொண்டு முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிடுகிறாள். சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் கோவிலில் பூஜை செய்ய தொடங்க, சாமுண்டீஸ்வரி என் பொண்ணு சுவாதி நல்லா பாடுவா என்று சொல்ல சுவாதி பாட்டு பாடுகிறாள். அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் ஒருவிதமா பதற்றத்தோடு இருப்பதை பார்த்த மயில்வாகனம், அவரை தனியாக அழைத்து, என் மாப்பிள்ளை என்ன யோசனை என கேட்கிறார். எதைப்பற்றியும் கவலைப்படாதே, வெளியில் தான் போலீஸ் டீம் இருக்கே அதை மீறி, மாயா கோவிலுக்குள் வர முடியாது என்கிறான். உடனே கார்த்திக், இல்ல சகல மனசு ஏதோ வருத்தமா இருக்கு, ஏதோ தவறாக நடந்து விடும் என்று தோன்றுகிறது என்கிறார். இந்த நேரம் பார்த்து கார்த்திக்கிற்கு போலீஸ் அதிகாரியிடம் இருந்து போன் வருகிறது. இந்த இடத்தில் எங்கேயும் மாயா இல்லை, அவள் கோவிலுக்குள் இருக்க வாய்ப்பு இருக்கு என சொல்கிறார்.இதைக்கேட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைகிறார்.
சரிந்து விழந்த ரேவதி:அதற்குள் மாறு வேஷத்தில் இருந்த மாயா துப்பாக்கியை கையில் எடுத்து, ரேவதியை குறி வைக்கிறாள். அபபோது சாமுண்டீஸ்வரி என் மகளை விட்டு விடு என்று கெஞ்ச, இவளை நான் எப்படி விடுவது, இவளால் தான் என் மகேஷ் எங்கே இருக்காரு என்றே தெரியவில்லை. நான் மட்டும் மகேஷ் இல்லாமல் இருப்பேன், உன் பெண்ணு மட்டும், புருஷன் கூட சந்தோஷமா இருப்பாலா, ஏற்கனவே என்னை உன் மாப்பிள்ளை போலீசில் பிடித்து கொடுத்தார். அங்கிருந்து தப்பித்து வந்ததே, ரேவதியோட கதையை முடிக்கத்தான், ரேவதி செத்துவிட்டா நான் நிம்மதியா ஜெயிலில் இருப்பேன் என்று சொல்லிவிட்டு, ரேவதியை நோக்கி சுட, ரேவதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறாள்.
உயிருக்கு போராடும் : இதனால் சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மாயா அங்கிருந்து தப்பித்து விட கார்த்திக் கண்ணீருடன் ரேவதியை காரில் தூக்கி போட்டுக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறான். உனக்கு ஒன்னும் ஆகாது ரேவதி நான் இருக்கேன் என்று ஆறுதல் சொன்னபடி ஹாஸ்பிடலுக்கு வருகிறான். ரேவதியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தவன் போலீசையை அழைத்து அந்த மாயாவை பிடிச்சிட்டீங்களா? என்னாச்சு என்று விசாரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











