உயிர் பிரியும் நேரத்தில் காதலை சொன்ன கார்த்தி.. உயிர் பிழைப்பாளா ரேவதி? கார்த்திகை தீபம்!
சென்னை: கோவிலுக்குள் மாறு வேஷத்தில் இருக்கும் மாயா, துப்பாக்கியை கையில் எடுத்து, ரேவதியை குறி வைத்து சுட்டுவிட்டு தப்பிவிடுகிறாள். ரேவதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவரும் கார்த்திக், ரேவதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். ஒட்டுமொத்த குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகின்றனர். ரேவதியை கார்த்திக், தூக்கிக்கொண்டு ஓடுகிறான். மயில்வாகனம் மருத்துவமனைக்கு வேகமாக காரை ஓட்டிச்செல்கிறார்.
ரேவதியின் நிலைமையை பார்த்து, மயில்வாகனம், கார்த்தி கதறி அழுதபடி வந்து கொண்டு இருக்க, அப்போது ரேவதி, புருஷன் மடியில உயிர் போற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்னு தெரியல, ஆனா அந்த பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு, என்று சொல்கிறாள். அதைக் கேட்டு கலங்கிய கார்த்திக், ஏற்கனவே இதேபோல தீபா பேசிய வார்த்தைகளை கார்த்திக் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறான். தீபாவை போல, ரேவதியையும் விட்டுவிடக் கூடாது என பதற்றத்தில் இருக்கும் கார்த்திக், உனக்கு ஒன்னும் ஆகாது ரேவதி, உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன் என சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: உங்க மடியில் உயிர் போவதாக இருந்தால் எனக்கு கவலையே இல்லை. ஆனால், கடைசியாக ஒரே ஒரு முறை உன்னை எனக்கு பிடிக்கும், உன்னை நான் காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்லுங்க, அந்த வார்த்தையை கேட்டுவிட்டு நான் சந்தோஷமா சாவேன் என்கிறாள். இதனால், மனம் உடைந்து போன கார்த்தி உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் ரேவதி, உன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன், உனக்கு எதுவும் ஆகாது, என சொல்லிக் கொண்டிருக்க, ரேவதி மயங்கி விடுகிறாள். உடனே கார்த்திக் மருத்துவமனையில் ரேவதியை அனுமதிக்கிறான். அவளுக்கு உடனடியாக ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டும், அதன்பிறகு தான் எதையும் சொல்ல முடியும் என்று சொல்ல, அனைவரும் வருத்தப்படுகின்றன.
பதறிய பரமேஸ்வரி பாட்டி: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ரேவதியை சுட்டுவிட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த மாயாவிற்கு, காளியம்மா தனது வீட்டில் இடம் கொடுக்கிறாள். ரேவதிக்கு துப்பாக்கிசூடு நடந்த விஷயம் தெரிந்த பரமேஸ்வரி பாட்டி பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வருகிறாள். ஆனால், சந்திரகலா, நீங்க எதுக்கு வந்தீங்க, நீங்க என்னைக்கு வீட்டுக்குள் வந்தீங்களோ அன்னையில் இருந்தே பிரச்சனைத்தான் என்று சொல்லி, ரேவதியை பார்க்கவிடாமல் தடுத்து நிறுத்துகிறாள். ஆனால் சாமுண்டேஸ்வரி, எதிர்பாராத விதமாக விடு பார்த்துட்டு போகட்டும் என்று ரேவதியை பார்க்க அனுமதி அளிக்கிறாள். ரேவதியை இந்த நிலைமையில் பார்த்து கண் கலங்கும் பாட்டி, கோவிலுக்கு கிளம்பி செல்கிறாள்.
ரேவதி உயிர் பிழைப்பாளா: கோவிலில், கடவுளே ஏன் என் என் குடுத்தை இப்படி சோதிக்கிற, எப்படியாவது என் பேத்தி ரேவதியை காப்பாற்றிடு என்று வேண்டுகிறாள். அப்போது, கோவில் கட்ட நிலம் தேவைப்படுத்தாக சிலர் பேசிக்கொண்டு இருப்பது பரமேஸ்வரி பாட்டியின் காதில் விழா, அதற்கு தேவையான நிலத்தை தருவதாக வாக்கு கொடுக்கிறார். அடுத்து அங்கு வந்த முருக பக்தர் ஒருவர் என்னமா ஆச்சு என்று விசாசித்துவிட்டு, விபூதி கொடுக்கிறார். அந்த விபூதியை பரமேஸ்வரி பாட்டி எடுத்து வந்து ICU-ல் கந்தசஷ்டி கவசம் பாடி ரேவதிக்கு பூசி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











