உயிருக்கு போராடும் ரேவதி.. மாரியை கடத்திய சிவனான்டி... கார்த்திகை தீபம்!

சென்னை: ஆப்ரேஷனுக்காக வேலைகள் நடந்து கொண்டு இருக்க, ரேவதிக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும், ரேவதியின் ரத்தம் அரிய வகை ரத்தம், இந்த ரத்தத்திற்காக பல ரத்த வங்கியில் பேசிவிட்டோம். எங்கள் மருத்துவமனைக்கு மாரி என்பவர் ரத்தம் கொடுப்பார் அவரிடம் பேசி இருக்கிறோம் என்கிறார் நர்ஸ். உடனே கார்த்திக், மாரியின் நம்பரை வாங்கி, மாரியை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். பிறகு கார்த்திக், நானே உங்களை நேரடியாக வந்து அழைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறான்.

இந்த விஷயத்தை சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து, ரேவதிக்கு ரத்தம் கொடுக்க மாரி என்ற பெண் கிடைச்சி இருக்கா, அவளை அழைத்து வருவதற்கான கார்த்திக், இந்த ஊருக்கு கிளம்பிவிட்டான். நீங்க அவன் அந்த ஊருக்கு வருவதற்குள், மாரியை கடத்திவிடுங்கள் என சொல்கிறாள். இதைக்கேட்ட சிவனாண்டி, மாரியின் ஊருக்கு தேடி சென்று நான் தான், கார்த்திக் என நாடமாடி, மாரி கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறான்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரேவதியின் உடல்நிலை மேலும் மோசமடைய வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ரேவதி உடல்நிலை தேறி வரவேண்டும் என்பதற்காக ஆசிரமத்தில் உணவு கொடுக்க முடிவு செய்யும் சாமுண்டீஸ்வரி ஆசிரமத்திற்கு சென்று உணவு கொடுக்கிறாள். அங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும், ரேவதி உடல் நலம் பெற்று திரும்பிவர வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றனர்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

மாரி எங்கே இருக்கிறாள்: மறுபக்கம், கார்த்திக் மாரியை தேடி வீட்டுக்கு செல்ல அவள் இல்லாதது தெரிகிறது. மேலும், இரண்டு பேர் வந்து மாரியை அழைத்து சென்றார்கள் என்று சொல்ல, அது நிச்சயம் சிவனாண்டியாகத்தான் இருக்கும் என மயில்வாகனம் சொல்கிறான். இதையடுத்து, மாரியின் நம்பருக்கு கார்த்திக் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்கிறார். அப்போது, அந்த வழியாக பழனிக்கு பாதராத்திரை சென்ற பக்தர்கள் கையில், மாரியின் செல்போன் கிடைக்கிறது. முருக பக்தர்கள் போனை எடுத்து பேசுகின்றனர். அதன் பிறகு அவர்கள் சொன்ன இடத்திற்கு கார்த்திக் சென்று போனை வாங்கிக்கொள்கிறான். அப்போது, அந்த முருக பக்தர்கள் உங்கள் மனைவிக்கு ஒன்றும் ஆகாது என சொல்கின்றனர்.

மனம் திருந்திய சாமுண்டீஸ்வரி: அதே நேரம், பரமேஸ்வரி பாட்டி கோவிலில், ரேவதி குணமடைய வேண்டும் என தீச்சட்டி ஏந்த முடிவெடுக்கிறார். அப்போது, ரோகிணி, துர்கா இருவரும், நாங்களும் ரேவதிக்காக தீச்சட்டி எடுக்கிறோம் என்கின்றனர். இதையடுத்து, தீச்சட்டி எடுப்பதற்காக அனைவரும் தயாராகி வர, அப்போது, பூசாமி, இந்த பூஜையில் எந்தவிதமான தடங்கலும் வந்துவிடக்கூடாது, அனைவரும் கவனமாக எடுக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதையடுத்து, அனைவரும் தீச்சட்டி எடுப்பதை பார்த்து சாமுண்டீஸ்வரி கண்கலங்குகிறாள். அதோடு, பரமேஸ்வரியை, மாமியார் என்று கூட பார்ககாமல், எத்தனை நாள் அவமானப்படுத்தி இருக்கிறேன், ஆனால், அவங்க தனது பேத்தி குணமடைய வேண்டும் என்பதற்காக இந்த வயதிலும் தீச்சட்டி எடுப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறாள். மறுபக்கம் ரேவதியின் உடல் நிலையை சிறு முன்னேற்றம் ஏற்பட அதை பார்த்து சாமுண்டீஸ்வரி சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X