மோசமான நிலையில் ரேவதி.. மாரி செய்யும் பூஜை.. கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதிக்கு ரத்தம் கொடுக்க இருந்த மாரியை, ஒரு இடத்தில் கடத்தி சென்று அடைத்து வைத்து இருக்கிறான் சிவனாண்டி. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கார்த்தி, அங்கிருந்த ரவுடிகளுடன் சண்டை போட்டு மாரியை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறான். அதன் பின் மாரி, ரேவதிக்கு ரத்தத்தை கொடுக்க ஆபரேஷன் நடந்து முடிகிறது. ஆப்ரேஷனை முடித்துவிட்டு வெளியேவந்த மருத்துவர் வசந்த், ரேவதி நன்றாக இருக்கிறார் என சொல்லிவிட்டு கார்த்திகை மட்டும் தனியாக அழைத்து பேசுகிறார்.

அதாவது, ரேவதியின் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனாலும், அவர் அபாய கட்டத்தில் தான் இருக்கிறார். அவர் நான்கு மணி நேரத்திற்குள் கண் விழிக்கவில்லை என்றால், அதற்குப் பின் எதுவும் சொல்வதற்கு இல்லை என சொல்லிவிடுகிறார். இதைகேட்டு கார்த்தி அதிர்ச்சி அடைகிறார். இந்த விஷயத்தை கார்த்தி வெளியில் வந்து அனைவரிடத்திலும் சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது மாரி எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க நிச்சயமாக ரேவதி, நல்லபடியாக குணம் அடைவார் அதற்காக நான் ஒரு பூஜை செய்கிறேன் என அந்த பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து, ரேவதிக்கு ஆப்ரேஷன் முடிந்துவிட்டது. ஆனால், அவ இன்னும் நான்கு மணி நேரத்துக்குள் கண் விழிக்கவில்லை என்றால் அவளுடைய கதை, அவ்வளவு தான் என மருத்துவர் சொல்லி இருக்கிறார். அவளை எப்படியாவது பிழைக்க வைக்க, மாரி சிறப்பு பூஜை ஒன்றை செய்யப் போகிறாள். அவள் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவள் போல தெரிகிறது. அவள் மட்டும் பூஜை செய்துவிட்டால், நிச்சயம் ரேவதி கண்விழித்துவிடுவாள், ரேவதி பிழைக்கவே கூடாது. இந்த பூஜையும் நடக்கக்கூடாது. அதற்கு என்ன வேலையை செய்ய வேண்டுமோ அதை செய்யுங்க, வழக்கம் போல இந்த முறையும் நாம தோற்றுவிடக்கூடாது. ரேவதியே இல்லை என்றாகிவிட்டால், கார்த்திக், சாமுண்டீஸ்வரி வீட்டில் இருக்க மாட்டான். ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்று சொல்கிறாள். இதைக்கேட்டுக் கொண்ட சிவனான்டி, காளியம்மாளிடம் விஷயத்தை சொல்ல, பூஜையை தடுப்பதற்கான திட்டத்தை போடுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X