மாரியின் தெய்வ சக்தி.. ரேவதியை காப்பாற்றி கார்த்திக்.. ஈஸ்வரியிடம் சிக்கிய மாயா.. கார்த்திகை தீபம்!
சென்னை: சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து, ரேவதிக்கு ஆப்ரேஷன் முடிந்துவிட்டது. ஆனால், அவ இன்னும் நான்கு மணி நேரத்துக்குள் கண் விழிக்கவில்லை என்றால் அவளுடைய கதை, அவ்வளவு தான் என மருத்துவர் சொல்லி இருக்கிறார். அவளை எப்படியாவது பிழைக்க வைக்க, மாரி சிறப்பு பூஜை ஒன்றை செய்யப் போகிறாள். அவள் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவள் போல தெரிகிறது. அவள் மட்டும் பூஜை செய்துவிட்டால், நிச்சயம் ரேவதி கண்விழித்துவிடுவாள், ரேவதி பிழைக்கவே கூடாது. இந்த பூஜையும் நடக்கக்கூடாது. அதற்கு என்ன வேலையை செய்ய வேண்டுமோ அதை செய்யுங்க, வழக்கம் போல இந்த முறையும் நாம தோற்றுவிடக்கூடாது என்கிறாள்
இதைக்கேட்டுக் கொண்ட சிவனான்டி, காளியம்மாளிடம் விஷயத்தை சொல்ல, பூஜையை தடுப்பதற்கான திட்டத்தை போடுகிறாள். அப்போது மாயா வீட்டுக்கு வர காளியம்மா அந்த ரேவதி இன்னும் சாகல உயிரோட தான் இருக்கா என்று சொல்ல மாயா நான் என்னென்னமோ திட்டம் போட்டேன் ஆனா கார்த்தி எல்லாத்தையும் தவிடு பொடியாக்கிட்டான். ஆனால், அந்த ரேவதியை நல்லாவே வாழவிட மாட்டேன் அவள் கதையை நான் முடித்து காட்டுகிறேன் என சாவால் விடுகிறான். அதே நேரம் சிவனாண்டி, முத்துவேல் இருவரும், கொஞ்ச நாளைக்கு கார்த்திக் கிட்ட உஷாரா தான் இருக்கணும். நம்ம மேல கொல காண்டில் இருப்பான். நாம மாயாவை வைத்தே காரியத்தை சாதித்துக்கொள்ள வேண்டும் என மாயாவை காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு செல்லும் மாயா, நர்ஸ் உடை அணிந்து கொண்டு, மாஸ்க் போட்டுக்கொண்டு ரேவதியின் அறைக்கு செல்கிறாள்.

கார்த்திகை தீபம்: மறுபக்கம், மாரியின் தெய்வசக்தி நினைவில் வந்து,ரேவதியை யாரோ கொல்லப்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. இந்த விஷயத்தை மாரி கார்த்திக்கிடம் சொல்கிறார். ரேவதியை யாரோ நர்ஸ் கொல்லப்பார்க்கிறாள். அவளது அறைக்கு யாரையும் போக வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்ல, கார்த்திக், அத்தை சாமுண்டீஸ்வரிக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்கிறான். இதை கேட்டு பதறிப்போன சாமுண்டீஸ்வரி வேக வேகமாக ரேவதியின் அறைக்கு வந்து கொண்டு இருக்கிறாள். அறையில் மாயா, நர்ஸ் வேடத்தில் என்னடீ ரேவதி உன்னை எத்தனை வாட்டித்தான் கொல்வது, உனக்கு ஆயுசு அவ்வளவு கெட்டியா.... நான் மட்டும் என் மகேஷ் இல்லாமல் கஷ்டப்பட வேண்டும். ஆனால், நீ உன் புருஷன் கூட சந்தோஷமா இருப்பியா... நான் உன்னை வாழ விடமாட்டேன் என சொல்லிக்கொண்டே ரேவதியை கழுத்தை பிடித்து நெறிக்கிறாள்.
வசமாக சிக்கிய மாயா: அந்த நேரம் பார்த்து சாமுண்டீஸ்வரி உள்ளே வந்துவிட பதறிபோன மாயா தப்பிக்க பார்க்கிறாள். அவளை வளைத்துபிடித்த சாமுண்டீஸ்வரி, நானே உன் கதையை முடிக்க வேண்டும் என நினைத்தேன் நீயே வந்து மாட்டிக்கிட்டியா என அவளை பிடித்து சரமாரியாக அடிக்கிறாள். ஒரு கட்டத்தில் மாயா, சாமுண்டீஸ்வரியிடம் இருந்து தப்பித்து ஒடி வெளியில் இருந்த காரில் ஏறி தப்பித்துவிடுகிறாள். மாயாவை பின் தொடர்ந்து ஓடிய சாமுண்டீஸ்வரி அந்த காரின் நம்பரை பார்த்துவிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











