ரேவதியிடம் காதலை சொன்ன கார்த்திக்.. கடவுள் சேர்ந்து வைத்த காதல்.. கார்த்திகை தீபம்!

சென்னை: மாயா, ரேவதியை கொல்ல இருந்த நேரம் பார்த்து சாமுண்டீஸ்வரி உள்ளே வந்துவிட பதறிபோன மாயா தப்பிக்க பார்க்கிறாள். அவளை வளைத்துபிடித்த சாமுண்டீஸ்வரி, நானே உன் கதையை முடிக்க வேண்டும் என நினைத்தேன் நீயே வந்து மாட்டிக்கிட்டியா என அவளை பிடித்து சரமாரியாக அடிக்கிறாள். ஒரு கட்டத்தில் மாயா, சாமுண்டீஸ்வரியிடம் இருந்து தப்பித்து ஒடி ஒளிந்துவிடுகிறாள். இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரி கார்த்திக்கிடம் சொல்ல, இப்போதைக்கு நமக்கு ரேவதியின் உயிர் தான் முக்கியம், அதன் பின் மாயாவதை பார்த்துக்கொள்ளலாம் என சொல்கிறான்.

அதன் பின், கார்த்திக், மாரியை மருத்துவமனைக்கு அழைத்து வர ரேவதிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. வெளியில் தப்பி சென்றதாக அனைவரும் நினைத்திருந்த மாயா மருத்துவமனையிலேயே ஒரு இடத்தில் பதுங்கி இருக்கிறாள். ரேவதிக்கு ஆபரேஷன் நடக்கப் போவதை தெரிந்து கொண்ட அவள். இந்த ஆப்ரேஷன் சரியாக நடக்கக்கூடாது அவள் இறந்து விட வேண்டும் என அங்கு இருந்த கரண்ட் பாக்ஸை கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தி விடுகிறாள். இதனால் ஆபரேஷன் செய்து கொண்டு இருக்கும்போதே பவர் கட் ஆகி விடுகிறது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் ஜெனரேட்டரும் வேலை செய்யாததால், மருத்துவர் வெளியே, பவர் கட்டாகிவிட்டது, ஜெனரேட்டரும் இல்லை என்று சொல்கிறார். உடனே கார்த்திக்கு வெளியில் இருந்து ஜெனரேட்டரை வர வைக்க ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்கிறது.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இனிமேல் ரேவதிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, குண்டை வெளியில் எடுத்துவிட்டோம் என சொல்ல அனைவரும் நிம்மதி அடைகின்றனர். அப்போது சாமுண்டீஸ்வரி, மாரிக்கு நன்றி சொல்கிறாள். உடனே மாரி நன்றி சொல்ல வேண்டியது எனக்கு இல்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் என அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி, மாப்பிள்ளை ரேவதியுடன் இருக்கட்டும், நாம் அனைவரும் கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு வரலாம் என அனைவரும் கிளம்புகின்றனர். அப்போது ரேவதியின் கையை பிடித்துக் கொண்டு கண் கலங்கும் கார்த்திக். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் ரேவதி, உன்னுடைய ஒவ்வொரு விளையாட்டுத்தனமான குறும்பையும் நான் ரசித்து இருக்கிறேன். ஆனால், தீபாவை போல உன்னையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தால் அதை நான் வெளியில் சொல்லவில்லை. ஐ லவ் யூ ரேவதி என சொல்கிறார். இந்த நேரம் ரேவதியை கண்விழித்து பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X