வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த துர்கா.. திருமணம் நடக்குமா? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், மாப்பிள்ளையின் டூப்ளிகேட் அம்மா அப்பா சாமுண்டீஸ்வரி வீட்டிலிருந்து நகை பணத்தை திருடிக் கொண்டு ஆட்டோவில் எஸ்கேப்பாக முயற்சி செய்கின்றனர். அவர்கள் இருவரும் போலி அப்பா, அம்மா என தெரிந்த கொண்ட மயில்வாகனம், ஆட்டோ டிரைவராக மாறுவேடத்தில் வந்து அவர்களை கண்டுபிடித்து விடுகிறார். உண்மையில் நீங்க யார் என்பதை சாமுண்டீஸ்வரியிடம் சொல்லிவிட்டால், உங்களை விட்டு விடுகிறேன். ஆனால், ஏதாவது ஏடாகூடமா நடந்தால், ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என சொல்லிவிட்டு அவர்களை மண்டபத்திற்கு அழைத்து வருகிறான்.

சந்திரகலாவால் கடத்தப்பட்ட கர்ப்பிணி பெண் வசந்தாவை கார்த்திக் காப்பாற்றுகிறான். அந்த நேரத்தில், வசந்தாவுக்கு பிரசவ வலி ஏற்பட வசந்தாவை கார்த்திக் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான். அப்போது, வசந்தாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதையடுத்து, கார்த்திக் இந்த திருமணத்தை நான் எப்படியாவது நிறுத்தி விடுகிறேன். நீங்கள் உங்களுடைய குழந்தையை கவனித்துக் கொள்ளுங்கள் என வசந்தாவிடம் சொல்கிறான் கார்த்திக். உடனே வசந்தா, நானும் திருமண மண்டபத்திற்கு வருகிறேன். இது என்னுடைய வாழ்க்கை, என்னுடைய குழந்தைக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக நானும் நிச்சயமாக வந்து மாப்பிள்ளையின் உண்மையான முகத்திரையை கிழிப்பேன் என்று சொல்ல கார்த்திக் வசந்தாவை அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்திற்கு வருகிறான்.

Zee tamil TV Karthigai Deepam serial September 3rd Episode
Photo Credit:

கையில் விஷ பாட்டிலுடன் துர்கா: ஆனால் திருமண மண்டபடத்தில் துர்கா, நவீன் வராததால் என்ன ஆகுமோ என்கிற பயத்துடன் கையில் விஷத்தை வைத்துக்கொண்டு இருக்கிறாள். கார்த்திக் மாமா இந்த கல்யாணத்தை நிச்சயம் நிறுத்தி விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இதுவரை மாமா வரவில்லை. நவீனை தவிர என் கழுத்தில் வேறு யாரும் தாலி கட்டக்கூடாது. ஒரு வேளை ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிட்டால் இந்த விஷத்தை குடித்து சாக வேண்டியது தான் என்ற முடிவுடன், துர்கா கையில் விஷ பாட்லுடன் இருக்கிறாள்.

நடக்கப்போவது என்ன: மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அப்போது ரேவதி கார்த்திக்கிற்கு போன் செய்து. இங்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போ வருவீங்க என்று கேட்க, அப்பொழுது கார்த்திக், நான் வசந்தாவை அழைத்து கொண்டு மண்டபத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். உன்னால் முடிந்த வரை திருமணத்தை தாமதப்படுத்து என சொல்கிறான். மணமேடையில் நீண்ட நேரமாக துர்கா மட்டும் அமர்ந்து இருக்க, ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள் என சொல்ல சந்திரகலா மாப்பிள்ளையை அழைத்து வர செல்கிறார்.

துர்கா திருமணம் நடக்குமா: பின், ரேவதியிடம் தாலியை கொடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வர சொல்ல தாமதப்படுத்தும் நோக்கத்துடன் ரேவதி ஒவ்வொருவரிடமும் வேண்டுமென்றே நலம் விசாரித்து பேசுகிறார். இதை புரிந்து கொண்ட சந்திரகலா, ரேவதியிடம் இருந்து தாம்பூல தட்டை வாங்கி, ஆசீர்வாதம் வாங்கியது போது, கல்யாணத்தை நடத்தலாம் என சொல்கிறாள். இதையடுத்து மாப்பிள்ளை துர்கா கழுத்தில் தாலி கட்டுவதற்காக செல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X