துர்காவை தலைமுழுகிய சாமுண்டீஸ்வரி.. பரமேஸ்வரி எடுக்க போகும் முடிவு என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: ரேவதியிடம் தாலியை கொடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வர சொல்ல தாமதப்படுத்தும் நோக்கத்துடன் ரேவதி ஒவ்வொருவரிடமும் வேண்டுமென்றே நலம் விசாரித்து பேசுகிறார். இதை புரிந்து கொண்ட சந்திரகலா, ரேவதியிடம் இருந்து தாம்பூல தட்டை வாங்கி, ஆசீர்வாதம் வாங்கி, மாப்பிள்ளையிடம் தாலியை கொடுத்து, மாப்பிள்ளை கட்டும் நேரத்தில் கார்த்திக், மயில்வாகனன் என அனைவரும் உள்ளே வந்து கல்யாணத்தை நிறுத்துகின்றனர்.
அப்போது கார்த்திக், வசந்தாவை காட்டி, இந்த பெண் யார் என்று தெரியுமா.. என மாப்பிள்ளை இடம் கேட்கிறாள். வசந்தாவை பார்த்த பயத்தில் மாப்பிள்ளை இருக்க. அந்த நேரம் சாமுண்டீஸ்வரி என்ன மாப்பிள்ளை யார் இந்த பெண் என்று கேட்கிறாள். அப்போது, கார்த்திக், நீங்க துர்காவுக்கு கல்யாணம் செய்து வைக்க பார்த்த மாப்பிள்ளை எவ்வளவு கேவலமானவர் தெரியுமா? இந்த பெண்ணிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி, இந்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டுவிட்டு, பணத்திற்காக துர்காவை திருமணம் செய்து திட்டம் போட்டு இருக்கான். அது மட்டும் இல்லை, மாப்பிள்ளையின் அப்பா அம்மானு வந்தவங்க, இவனின் அப்பா, அம்மாவே இல்லை. ரெண்டு பேருமே திருடுபவர்கள், நம்ம வீட்டில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு போகும் நேரத்தில் மயில்வாகனம் தான் அவர்களை பிடித்து இங்கே அழைத்து வந்தார் என சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வசந்தா, இந்த ஆள் நல்லவன் இல்லை, என்னை ஏமாற்றிவிட்டு இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டான். இவன் பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வான் என்கிறாள், என சொல்லி கதறி அழுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி மாப்பிள்ளையை பிடித்து கண்ணத்தில் பளார் என அடித்து அவனை வெளியில் துரத்தி விடுகிறாள். பின், என்னுடைய மகள் வாழ்க்கையை நானே கெடுக்க பார்த்தேன். மாப்பிள்ளை பற்றி தெளிவாக விசாரிக்காமல் இப்படி ஒரு தவறை செய்து விட்டேனே என புலம்பி கொண்டு இருக்கிறாள்.
துர்காவை தலைமூழ்கிய சாமுண்டீஸ்வரி: அப்போது கார்த்தி, நவீனை உள்ளே வரச்சொல்லி நவீன் மிகவும் நல்லவன் பெரிய குடும்பத்தை சேர்ந்தவன், அதுமட்டுமல்லாமல் துர்காவும் நவீனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என சொல்கிறான். ஆனால் சாமுண்டீஸ்வரி ஒரு காலமும் நவீனை என் மாப்பிள்ளையா நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன், அவன் ஒரு ஏமாத்துக்காரன் என்கிறாள். இதைக்கேட்டு கோவப்பட்ட துர்கா, அவருக்கு மரியாதை கொடுத்து பேசுங்க, அவர் எனக்கு தாலி கட்டிய புருசன் என, கழுத்தில் மறைத்து வைத்து இருந்த தாலியை காட்டுகிறாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி துர்காவை தலை மூழ்கி வெளியே அனுப்புகிறாள். துர்கா, நவீனை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டது எல்லாருக்கும் தெரிந்தும் யாருமே என்னிடம் சொல்லவில்லை என்ற கோவத்தில் இருக்கிறாள் சாமுண்டீஸ்வரி.
மறுபக்கம் முத்துவேல், சிவனாண்டி ஆகியோர் ஜெயிலுக்கு சென்று காளியம்மாவை சந்தித்து கல்யாணம் நின்று போன விஷயத்தை சொல்ல சந்தோசப்படுகிறாள். இது சாமுண்டீஸ்வரிக்கு ஏற்பட்ட தோல்வி தான். எனக்கு சந்தோசமாக இருக்கு என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











