கொல்லப்பட்ட கான்ஸ்டபிள்.. துர்காவின் திருமணத்தால் மீண்டும் பிரிந்த குடும்பம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் துர்கா நவீனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டது தெரிந்த சாமுண்டீஸ்வரி. ஒரு காலமும் நவீனை என் மாப்பிள்ளையா நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன், அவன் ஒரு ஏமாத்துக்காரன், ஆனால், நான் உன் மேல ரொம்ப நம்பிக்கை வைத்து இருந்தேன். ஆனால், உனக்கு இந்த அம்மாவைவிட இவன் பாசம் தான் உனக்கு தெரிந்து இருக்கு. எனக்கு வர கோவத்துல, உன்னை இதே இடத்துல சுட்டு தள்ளி இருப்பேன். ஆனால், பாசம் என்ன தடுக்குது. இதுக்கு மேல நான் உனக்கு அம்மாவும் இல்ல நீ, எனக்கு மகளும் இல்ல என சொல்லிவிட்டு, துர்கா, நவீன் இருவரின் கையையும் பிடித்து இழுத்து வந்தது வெளியே தள்ளுகிறாள்.

குடும்பத்தில் இருந்த அனைவரும் எவ்வளவு சமாதானம் சொல்லியும் சாமுண்டீஸ்வரி சமாதானம் ஆகவில்லை. அனைவருக்கும் துர்கா ரகசியமாக திருமணம் செய்து கொண்டது தெரிந்தும். அனைவருமே, என்னை ஏமாற்றி விட்டீர்கள் என ஆத்திரத்தோடு கத்துகிறாள். இதையடுத்து துர்கா, நவீன் இருவரும், கோயிலுக்கு செல்கின்றனர். இந்த விஷயம் தெரிந்து கோவிலுக்கு வரும் பரமேஸ்வரி பாட்டி, நவீனுக்கும் துர்காவுக்கும் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வருகிறாள். பின் துர்கா நவீன் இருவருமே பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு செல்கின்றனர். இந்த விஷயத்தை சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல, அவளுக்கு பரமேஸ்வரி மீது கோவம் அதிகமாகிறது.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், முத்துவேல், சிவனாண்டி ஆகியோர் ஜெயிலுக்கு சென்று காளியம்மாவை சந்தித்து கல்யாணம் நின்று போன விஷயத்தை சொல்ல, காளியம்மா சந்தோசப்படுகிறாள். இது சாமுண்டீஸ்வரிக்கு ஏற்பட்டு இருக்கும் முதல் தோல்வி. இதை கேட்கும் போது எனக்கு சந்தோசமாக இருக்கு என்கிறாள். இந்த விஷயத்தை வைத்தே பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரி கதையை முடிக்க வேண்டும். மருத்துவமனையில் இருக்கும் கான்ஸ்டபிள் பொழச்சு வந்து உண்மையை சொல்வதற்குள் அவன் கதையை முடித்துவிடுங்கள் என்கிறாள்.

கொல்லப்பட்ட கான்ஸ்டபிள்: காளியம்மா சொன்ன அறிவுரைப்படி சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும், ஒரு ஆளை ஏற்பாடு செய்து கான்ஸ்டவிளை கொல்ல மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். அந்த நபர் நர்ஸ் போட வேஷம் போட்டுக்கொண்டு கான்ஸ்டபிளை கொல்ல அறைக்கு செல்கிறான். நர்ஸ் கெட்டப்பில் இருப்பவரை பார்த்து சந்தேகப்படும் கார்த்தி, கான்ஸ்டபில் இருக்கும் அறைக்கு வேகமாக செல்ல, அங்கு ஆக்சிசன் மாஸ்க் நீக்கப்பட்டிருப்பதை கவனிக்கிறான். அந்போது அந்த கான்ஸ்டபிள், மயக்கத்தில் செல்போன் செல்போன் என்று சொல்லி விட்டு மயங்கிவிடுகிறார்.

அதிர்ச்சியில் பாட்டி: பின் மருத்துவர்களை கான்ஸ்டபிள் இறந்து விட்டதாக பரமேஸ்வரி பாட்டி, கார்த்தி அதிர்சி அடைகிற்னர். அப்போது, பரமேஸ்வரி பாட்டி, பிரிந்துபோய் இருக்கும் குடும்பம் இவன் மூலமாக சேர்ந்துவிடும் என நினைத்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்படுகிறாள். அப்போது,கார்த்திக் பயப்படாதீங்க பாட்டி, அந்த கான்ஸ்டபிள் இறக்கும் போது, ஏதோ செல்போன் செல்போன்-னு சொல்லிட்டே இருந்தாரு, அவருடைய செல்போனில் ஏதோ ஒரு ஆதாரம் இருக்கு என்று எனக்கு தோன்றுகிறது. அந்தபோன் கைக்கு வந்தால்,உண்மை தெரியும் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X