உன் பொண்டாடியை கொல்லாமல் விடமாட்டேன்.. பழிவாங்க காத்திருக்கும் மாயா.. கார்த்திகை தீபம்!

சென்னை: கான்ஸ்டபில் இறந்ததற்கு காரணம் பரமேஸ்வரி பாட்டி தான் என சந்தேகப்படும் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதனால், கான்ஸ்டபிளை சுட்டது யார் என்ற ஆதாரத்தை தேட தொடங்கும் கார்த்திக், மண்டபத்தில் இருந்த சிசிடிவி ஆதாரங்களை பரிசோதனை செய்யும்போது, அதில், பர்தா போட்ட பெண் கான்ஸ்டபிளை சுட்டுக்கொன்றது தெளிவாக தெரிகிறது. பிறகு அந்தப் பெண் மாயா என்பதை தெரிந்து கொள்கிறான்.

மயில்வாகனமும் கார்த்திக்கும், ஒரு திட்டத்தை போடுகின்றனர். அதாவது, ஒரு நர்சைவைத்து மாயாவுக்கு ஃபோன் செய்து, மருத்துவமனையில் மகேஷ் இருப்பதாக சொல்லி அவளை மருத்துவமனைக்கு வர வைக்கின்றனர். மகேசை பார்க்கும் ஆசையில் மாயா மருத்துவமனைக்கு வர, அங்கு தயாராக இருந்த கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் அவளை, கையும் களவுமாக பிடித்துவிடுகின்றனர். உடனே மாயா, எப்படியாவது மகேஷ் கிடைத்தால் போதும் என்ற ஆசையால் நர்ஸ் பேசியதை உண்மை என நம்பி வந்து விட்டேன். ஏய்... கார்த்திக் இது எல்லாம் உன் வேலை தானா.. ஒழுங்கா, மகேஷ் எங்கே இருக்கானு உண்மையை சொல்லிவிடு, நானும் மகேசும் எங்கையாவது கண் காணாத இடத்துக்கு போய்விடுகிறோம். மகேஷ் மட்டும் கிடைக்கவில்லை என்றால், உன்னை நான் நிம்மதியாகவே வாழ விடமாட்டேன் என சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அப்போது கார்த்திக், அதெல்லாம் இருக்கட்டும் மண்டபத்திற்கு எதற்காக வந்தே, கான்ஸ்டபிளை எதற்கு சுட்ட என்று கேட்கிறான். அப்போது மாயா நான் கான்ஸ்டபிளை சுடுவதற்காக வரவில்லை. நான் உன் பொண்டாட்டி ரேவதியை கொல்லத்தான் வந்தேன். படுபாவி அந்த கான்ஸ்டபிள் குறுக்கே வந்துவிட்டான். உன் பொண்டாடிக்கு ஆயுசு கெட்டிடா, ஆனால், நிச்சயமாக என்னைக்காவது ஒருநாள் ரேவதியை நான் கொல்லாமல் விடமாட்டேன் என சொல்கிறாள். அப்போது, அது கார்த்திக், அது நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் நடக்கவே நடக்காது என சொல்கிறான்.

வெளியில் வந்த பரமேஸ்வரி: இதையடுத்து மாயாவை, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் ஒப்படைக்கின்றனர். அதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டியை போலீசார் விடுதலை செய்கின்றனர். வெளிய வந்த பரமேஸ்வரி பாட்டி, இரண்டு குடும்பமும் சேர வேண்டிய நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்படுகிறாள். உடனே கார்த்தி, அதைப்பத்தி கவலைப்படாதீங்க பாட்டி, எப்படியாவது முத்துப்பாண்டியும் சிவனான்டியையும் அடித்து உதைத்தால் உண்மையை சொல்லி விடுவார்கள். உண்மையை நான் சீக்கிரமாக வெளியில் கொண்டு வருகிறேன் நீங்கள் நிம்மதியாக இருங்கள் என சொல்கிறான்.

கடுப்பில் சந்திரகலா: மறுபக்கம் சிவனாண்டி, சந்திரகலாவிற்கு ஃபோன், கான்ஸ்டபிளை சுட்டது மாயாவாம், அதை ஆதாரத்துடன் நிரூபித்து கார்த்திக், பரமேஸ்வரி பாட்டியை வெளியே கொண்டு வந்து விட்டான் என சொல்கிறான். இதை கேட்டு ஆத்திரப்படும் சந்திரகலா, அந்த பாட்டி ஜெயிலுக்குள்ளே இருக்க வேண்டும் என நினைத்தேன். கார்த்திக் இப்படி செய்து விட்டானே, இந்த கார்த்தியால் நம்முடைய எல்லா திட்டமும் வீணப்போகிறது, இவனுக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டியேஆக வேண்டும் என்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X