கார்த்திக் மீது வந்த சந்தேகம்.. சாமுண்டீஸ்வரி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: மாயாவை, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் இருவரும் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் ஒப்படைக்கின்றனர். அதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டியை போலீசார் விடுதலை செய்கின்றனர். மறுபக்கம் சிவனாண்டி, சந்திரகலாவிற்கு ஃபோன் செய்து, கான்ஸ்டபிளை சுட்டது மாயாவாம், அதை ஆதாரத்துடன் நிரூபித்து கார்த்திக், பரமேஸ்வரி பாட்டியை வெளியே கொண்டு வந்து விட்டான் என சொல்கிறான். இதை கேட்டு சந்திரகலா ஆத்திரப்படுகிறாள்.
இன்றைய எபிசோடில், சந்திரகலா, பரமேஸ்வரிடம் சென்று உன்னுடைய மாப்பிள்ளை உனக்கு மரியாதையே கொடுக்கவில்லை. உனக்கு யார் யார் எல்லாம் எதிரியோ அவர்களுடன் கூட்டு சேர்ந்து வேலை செய்து வருகிறான். இப்போது பரமேஸ்வரி பாட்டியை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்து இருக்கிறான். என்று சொல்லிக் கொண்டு இருக்கும் நேரத்திலேயே கார்த்திக் மற்றும் மயில்வாகனன் இருவருமே உள்ளே வருகின்றனர். அப்போது சந்திரகலா, அவர்களை தடுத்து நிறுத்தி பரமேஸ்வரி பாட்டியை வெளியில் கொண்டு வர வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன என்று கேட்கிறாள்.

கார்த்திகை தீபம்: உடனே கார்த்திக், நாங்க எதுவும் சொல்வதற்கு தயாராக இல்லை. இந்த வீடியோவை பாருங்கள் அப்போது தான் மண்டபத்தில் என்ன நடந்தது என்று உங்களுக்கே புரியும் என மாயா, கான்ஸ்டபிளை சுட்ட வீடியோவை காட்டுகிறான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடையும் சாமுண்டீஸ்வரி, மாயா எதற்கு மண்டபத்திற்கு வரவேண்டும், கான்ஸ்டபிளை ஏன் சுட வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுவிட்டு, எது எப்படியோ அது பரமேஸ்வரி எதுக்கு வெளியில் கொண்டு வந்தீங்க என்று கேட்கிறாள்.
இதைக்கேட்டு ஆத்திரப்படும் மயில்வாகனம், என்ன அத்தை கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாம பேசுறீங்க. மாயா எதுக்கு கல்யாண மண்டபத்துக்கு வந்தானு தெரியுமா.... ரேவதியை கொல்வதற்காக தான் வந்தான். கடைசி நேரத்துல கான்ஸ்டபிள் குறுக்க வந்ததால், கான்ஸ்டபிள் உயிர் போச்சு. இல்லனா ரேவதி தான் பலியாக இருப்பா. இந்த உண்மையான தெரிஞ்ச பிறகும், நாம எப்படி மாயாவை சும்மா விட முடியும் அதனாலதான், மாயாவை போலீசில் ஒப்படைத்தோம் என சொல்கிறாள்.
மாயா சொன்ன விஷயம்: அதைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரி ஜெயிலில் இருக்கும் மாயாவை சந்தித்து ரேவதியை கொல்ல தான் நீ வந்து இருக்க.. அவ மேல உன் மூச்சு காத்து கூட பட கூடாது என்று வார்னிங் கொடுக்கிறாள். உடனே மாயா, உன் மாப்பிள்ளை ராஜா தான், ராஜா சேதுபதியோட பேரன், அந்த உண்மை கூட தெரியாமல் இருக்கும் நீ எனக்கு வார்னிங் கொடுக்குறீயா.. என்னைக்காக இருந்தாலும் ரேவதியை நான் கொல்லாமல் விடமாட்டேன் என்கிறாள். மாயா, பேசியதை சாமுண்டீஸ்வரி யோசித்துக்கொண்டு இருக்கிறாள். பின் கான்ஸ்டபிளில் பேத்தியை கூப்பிட்டு உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்னிடம் தயங்காமல் கேள் என்று சொல்ல, ராஜா ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்து விட்டதாக சொல்ல சாமுண்டீஸ்வரி மாயா சொன்னது உண்மையா இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.
பரமேஸ்வரி பாட்டி, வீட்டிற்கு ஜோசியரை வர வைத்து நவீன் துர்காவின் சாந்திமுகூர்த்தத்திற்கு நாள் குறிக்கிறாள். அப்படியே கார்த்திக் ரேவதிக்கும் நாள் குறிக்க கார்த்திக் இதெல்லாம் இப்போ எதுக்கு என்று கேட்க பாட்டி அமைதியா இரு என்று அவனை அடக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











